காஞ்சி தமிழ் மன்றம் - மகளிர் மட்டும் பங்கேற்று உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

காஞ்சி தமிழ் மன்றம் - மகளிர் மட்டும் பங்கேற்று உரை!

  

காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் உள்ள எச். எஸ். அவென்யூ பூங்காவில், 11.6.2023 அன்று மாலை 5.30 மணி  அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் மூன்றாம் நிகழ்வு நடைபெற்றது. 

தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் திருக்குறள் கூறி பொருள் சொல்லப்பட்டது. 

உ.க. அன்பரசி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் ர.உஷா  விழாவிற்குத் தலைமை வகித்து  உரையாற்றினார்.

ஆசிரியர் சு. அமுதா, தமிழ் இலக்கியா, பா. துர்காதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கவிஞர் மு.சு. நரேந்திரன், கவிஞர் கு. ஆறுமுகம், கவிஞர் மு. தேவேந்திரன், கவிஞர் அமுதகீதன் ஆகியோர் பெண்ணுரிமை குறித்து  கவிதை வாசித்தனர். 

ஜெ. பேபி, கவிதா, ஜீவரத்தினம் ஆகியோர் தமிழ் மொழி,  பெண்ணுரிமை, தாய்மை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் குறித்து உரையாற்றினார்.

நிறைவாக, திராவிட இயக்க தமிழர் பேரவையின்  எழுத்தாளர் சாரதா தேவி சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில்: "தாய் வழிச் சமூகம், பெரியாரின் பெண் விடுதலை, பெண்ணுரிமைச் சிந்தனைகள், தற்கால இளைஞர்களின் மனநிலை" முதலிய செய்திகளை அனைவரையும் ஈர்க்கும் வகையில் எடுத்துரைத்தார். 

வெ. மார்க்ஸ் நிகழ்ச்சி குறித்த தம்கருத்தை சிறப்பாகப் பதிவு செய்தார்.  

காஞ்சி தமிழ் மன்றத்தின் அமைப்பாளர் முனைவர் காஞ்சி 

பா.கதிரவன், நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியோர்,  கவிதை பாடியோர், முன்னிலை வகித்தோர்,  பங்கேற்றோர், இணைந்து ஊக்குவித்தோர்  அனைவருக்கும் நன்றி கூறினார். இரவு 8.00 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இயக்க நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment