கலைஞரின் நூற்றாண்டு விழா நாளை தொடக்கம் இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

கலைஞரின் நூற்றாண்டு விழா நாளை தொடக்கம் இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 1- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3ஆம்தேதி வருகிறது. இந்த ஆண்டு கலைஞருக்கு நூற்றாண்டு விழா என்பதால் தி.மு.க. சார்பில் மிகப் பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத் திலும் அவரது பிறந்த நாள் விழா வையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். 

எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் மாவட்டம் தோறும் கலைஞருக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த முன்னோர்களுக்கு பொற் கிழி வழங்குவது கலைஞரின் தி.மு.க. குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம் பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். 

3-ஆம் தேதி சென்னை புளியந் தோப்பில் தோழமைக் கட்சியினர் பங்கேற்கும் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதே போல் அரசு சார்பிலும் கலைஞரின் நூற்றாண்டு விழா வெகு விமரிசை யாக கொண்டாடப்பட உள்ளது. கலைஞரைப் பெருமைப்படுத்தும் வகையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண் கள் அரசு ஊழியர்கள் பயன் அடைந்த மக்கள் ஆகியோரை இணைத்து விழாக்களை கொண் டாட ஏற்பாடுகள் நடந்து வருகி றது. இதற்காக ஒவ்வொரு மாவட் டத்திலும் அமைச்சர்கள் தலைமை யில் விழாக்குழு அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் விழாவின் முன் னேற்பாடாக சென்னை கலைவா ணர் அரங்கில் நாளை 2ஆம் தேதிக்கு முத்தமிழறிஞர் கலைஞ ரின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலச்சினை) வெளி யிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு, அமைச்சர்கள், நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள், அரசு உயர் அதிகாரிகள் பங் கேற்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment