பா.ஜ.க.வின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பொதுக் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

பா.ஜ.க.வின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பொதுக் கூட்டம்!

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்

கோவை, ஜூன் 18 - பா.ஜ.க.வின் ஜன­நா­யக விரோத - மக்­கள் விரோத - பழி­வாங்­கும்  எதேச்­ச­தி­கார  நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­டிக்­கும் வகை­யில் கோவையில் 16.6.2023 அன்று­ மாலை “மாபெ­ரும் கண்­ட­னப் பொதுக்­கூட்­டம்” நடை­பெற்றது.

இலட்­சக்­க­ணக்­கா­னோர் திரண்ட இந்த மாபெ­ரும் பொதுக்­ ­கூட்­டத்­தில் தி.மு.கழ­கப் பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு உள்­ளிட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள் பங்­கேற்று கண்­டன உரை நிகழ்த்­தி­னர்.

கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் தலைவருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் பயனாடை வழங்கினார்.

ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் புல­னாய்வு விசா­ரணை அமைப்­பு­களை குற்­றச் செயல்­க­ளில் தொடர்­பு­டை­ய­வர்­கள் மீது பயன்­ப­டுத்­தா­மல், தன்­னு­டைய அர­சி­யல் எதி­ரி­கள் மீது பா.ஜ.க. பயன்­ப­டுத்தி வரு­வதை ஊட­கங்­கள் புள்ளி விவரங்­க­ளு­டன் பல­முறை அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றது. ஆனா­லும் பா.ஜ.க. தலைமை திருந்­த­வில்லை. வெளிப்­ப­டை­யாக  - ஆண­வ­மான முறை­யில் விசா­ரணை அமைப்­பு­களை அர­சி­யல் உள்­நோக்­கத்­தோடு பயன்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.

தமிழ்­நா­டு­தான் பா.ஜ.க.வை பின்­னங்­கால்

பிட­ரியில் அடி­பட விரட்­டும் மாநி­லம்!

எல்லா மாநி­லங்­க­ளி­லும் சுற்­றிய பழி­வாங்­கும் பட­லம், தமிழ்­நாட்­டுக்­கும் வந்­து­விட்­டது. தமிழ்­நாடு என்­பது பா.ஜ­.க.வை பின்­னங்­கால் பிட­ரி­யில் அடி­பட விரட்­டும் மாநி­லம். இங்கு அவர்­க­ளால் எப்­போ­தும், எந்த சூழ்­நி­லை­யி­லும் வெல்ல முடி­யாது என்­பது மட்­டு­மல்ல, தனி­யாக நின்று டெபா­சிட்­கூட வாங்க முடி­யாது என்­பது தெரி­யும். அத­னால் தான் நேர்­வழி இல்­லா­மல் நேர்­மை­யற்ற வழி­க­ளில் பா.ஜ.க. தனது கீழான செயல்­க­ளைச் செய்­கி­றது.

மின்­சா­ரம் மற்­றும் மது­வி­லக்கு ஆயத் தீர்­வுத்­துறை  அமைச்­சர்  செந்­தில் பாலா­ஜியை கடந்த 13 ஆம் தேதி அன்று விசா­ரணை என்ற பெய­ரால் சித்­தி­ர­வதை செய்­துள்­ளார்­கள். நெஞ்­சு­வலி ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு, இத­யச் சிகிச்சை செய்ய வேண்­டிய அள­வுக்கு நெருக்­க­டியை உண்­டாக்கி விட்­டார்­கள். விசா­ர­ணைக்கு அமை­தி­யாக ஒத்­து­ழைப்­புத் தந்­த­வ­ரையே இந்­த­ள­வுக்கு வேண்­டு­மென்றே தொல்­லை­யை­யும், நெருக்­க­டி­யை­யும் கொடுத்­தி­ருப்­பது பழி­வாங்­கு­வதே தவிர, விசா­ரணை அல்ல. மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்­கள் பிர­தி­நி­தியை - அது­வும் அமைச்­ச­ரைச் சித்­தி­ர­வதை செய்­வ­தன் மூல­மாக அச்­சு­றுத்­து­வது அர­சி­யலே தவிர, விசா­ரணை அல்ல.

மேலும், தமிழ்­நாட்­டின் தலை­மைச் செய­ல­கத்­துக்­குள் ஒன்றிய பாது­காப்­புப் படைப் பிரிவு காவல்துறையினர் அழைத்து வரு­வ­து­தான் மாநில ஆட்­சி­யின் மாண்­பைக் காக்­கும் முறையா? இதன் மூல­மாக எங்­கும், எப்­போ­தும் நுழைந்து எதை­யும் செய்­வோம் என்ற ஆண­வப் போக்கே தெரி­கி­றது. எச்­ச­ரிக்கை விடுக்­கி­றார்­களா? மிரட்­டு­கி­றார்­களா?  

அமித்­ஷா­வின் சென்னை பய­ணம்

படு­தோல்வி என்­பதை மறைக்­கவே  கைது நட­வ­டிக்கை!

மூன்று நாள்­க­ளுக்கு முன்­னால்­தான் ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா சென்­னைக்கு வந்து சென்­றார். அவ­ரது பயண நோக்­க­மும், பிரச்­சா­ரக் கூட்­ட­மும் படு­தோல்வி என்­பதை அனை­வ­ரும் அறி­வார்­கள். இதனை மறைப்­ப­தற்­காக அமைச்­சர் செந்­தில் பாலாஜி ­மீது நட­வ­டிக்­கையை பாய்ச்சி இருக்­கி­றார்­கள்.சொரா­பு­தீன் என்­க­வுன்­டர்­வ­ழக்­கில் சி.பி.அய். வழக்­குப் பதிவு செய்­த­வு­டன் குஜ­ராத் உள்­துறை அமைச்­ச­ராக இருந்து கொண்டே தலை­ம­றை­வா­ன­வர் அமித்ஷா என்­பதை நாட்டு மக்­கள் மறக்­க­வில்லை.

“Don’t Create atmosphere of fear”  என்று சில வாரங்­க­ளுக்கு  முன்­பு­தான்  உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் அம­லாக்­கத்­து­றையை எச்­ச­ரித்து இருந்­தார்­கள். இப்­படி  உச்­சந்­த­லை­யில் உச்­ச­நீ­தி­மன்­றம் கொட்­டிய பிற­கும் பா.ஜ.க.வின் அம­லாக்­கத் துறை திருந்து­ வதா­கத் தெரி­ய­வில்லை. திருத்­தும் கட­மை­யும், பொறுப்­பும் நாட்டு மக்­க­ளுக்கே உண்டு.

பா.ஜ.க.வின் ஜன­நா­யக விரோத - மக்­கள் விரோத -  பழி­வாங்­கும் எதேச்­ச­தி­கார நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­டித்து கோவை மாந­கர், சிவா­னந்தா கால­னி­யில்  16.06.2023  அன்று  மாலை  5.00 மணி  அள­வில்  மதச்­சார்­பற்ற   முற்­போக்­குக்  கூட்­ட­ணிக்  கட்­சி­க­ளின்  சார்­பில்  ‘‘மாபெ­ரும் கண்­ட­னப் பொதுக்­கூட்­டம்” நடை­பெ­றும் என அறி­விக்கப்பட்டிருந்­தது. 

மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­களின் அறி­விப்பிற்கு இணங்க இந்த  மாபெ­ரும் கண்­டன பொதுக்­கூட்­டம் நடை­பெற்­றது.

இந்­தக் கூட்­ட­த்­தில் பா.ஜ.க.வுக்கு இறு­தித் தோல்­வி­யைத் தரும் வரை­யில் நமது மக்­கள் பிரச்­சா­ரம் தொட­ரும் என கட்­சித் தலை­வர்­கள் உரை­யாற்­றி­னர்.

இக்­கூட்­டத்­தில் டி.ஆர்.பாலு, (பொரு­ளா­ளர், தி.மு.க.),  ஆசி­ரி­யர் கி.வீர­மணி,  (தலை­வர், திரா­வி­டர் கழ­கம்),  கே.எஸ்.அழ­கிரி,  (தலை­வர்,   தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்டி),     வைகோ, (பொதுச்­செ­ய­லா­ளர், ம.தி.மு.க.),  கே.பால­கி­ருஷ்­ணன்   (செய­லா­ளர்,   மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, தமிழ்­மா­நி­லக் குழு),  ஆர்.முத்­த­ர­சன் (செய­லா­ளர்,  இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, தமிழ்­மா­நி­லக்­குழு),   கே.எம்.காதர்­மொ­கி­தீன் (தலை­வர்,   இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக்),     தொல்.திரு­மா­வ­ள­வன் (தலை­வர்,  விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி),  எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா,     (தலை­வர்,     மனி­த­நேய மக்­கள் கட்சி),  ஈ.ஆர். ஈஸ்­வ­ரன் (பொதுச் செய­லா­ளர், கொங்­கு­நாடு  மக்­கள் தேசிய கட்சி), தி.வேல்­மு­ரு­கன்  (தலை­வர், தமி­ழக வாழ்­வு­ரி­மைக் கட்சி) மற்­றும் ஒன்­றிய மே­னாள் அமைச்­சர் ஆ.இராசா எம்.பி. உள்­ளிட்ட தலை­வர்­கள் பங்­கேற்று கண்­டன உரை­யாற்­றி­னர்.

இதில் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சி­க­ளைச் சேர்ந்த தோழர்­கள், பொது­மக்­கள் என்று பல்­லா­யி­ர­க­ணக்­கா­னோர் திரண்­ட­னர்.

கூட்­ட­ணிக்­கட்­சித் தலை­வர்­கள் உரை!

ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் கைப்­பா­வை­யாக வரு­மான வரித்­துறை, அம­லாக்­கத்­துறை, மற்­றும் சி.பி.அய். அமைப்­பு­கள் செயல்­ப­டு­வ­தாக மதச்­சார்­பற்ற கூட்­டணி கட்­சி­க­ளின் தலை­வர்­கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ள­னர். மோடி அர­சின் சதி வேலை­கள் தமிழ்­நாட்­டில் ஒரு­போ­தும் எடு­ப­டாது என்­றும் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ள­னர்.

டி.ஆர்.பாலு எம்.பி.

கண்­ட­னப் பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய தி.மு.க. பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு, ஒன்­றிய பா.ஜ.க. ஆட்­சிக்கு விரை­வில் முடிவு கட்ட வேண்­டும் என்றார். அம­லாக்­கத்­து­றை­யின் துன்­பு­றுத்­த­லால் நெஞ்­சு ­வலி ஏற்­பட்டு மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரும் அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யி­டம், மருத்­து­வ­ம­னை­யில் வைத்து 8 நாள் விசா­ரிக்க வேண்­டும் என்று கூறப்­பட்டுள்ள நிலை­யில் அவ­ரது உடல்­ந­லத்­திற்கு அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார். மிரட்­ட­லுக்கு பணி­யாத மாநி­லம் தமிழ்­நாடு, அது­வும் தி.மு.க. அரசு என்­றும், நெருப்­பாற்­றில் பய­ணிப்­ப­வர் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் என்­றும் டி.ஆர்.பாலு கூறி­னார்.

ஒன்­றிய மேனாள் அமைச்­சர் ஆ.ராசா எம்.பி.!

கண்­ட­னப் பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய ஆ.ராசா எம்.பி., இந்­தி­யா­வின் அரசமைப்புச் சட்­டத்­தை­யும், மத­சார்­பற்ற கொள்­கை­க­ளை­யும் காப்­பாற்­றக் கூடி­ய­வர் நமது முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்­தான் என, பீகார் முத­ல­மைச்­சர் நிதிஷ்­கு­மார் தெரி­வித்­ததை சுட்­டிக்­காட்­டி­னார். 

கொங்கு மண்­ட­லத்­தில் தி.மு.க. வெற்றி பிர­கா­ச­மாக உள்­ள­தால், அமைச்­சர் செந்­தில் பாலா­ஜியை அம­லாக்­கத்­துறை கொடு­மைப்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும், அதானி குழும குற்­றச்­சாட்டு குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கா­மல் பிர­த­மர் மவு­னம் சாதிப்­ப­தா­க­வும் ஆ.ராசா விமர்சித்­தார். 

ஓர் ஆண்­டு­கா­லம் முழு­வ­தும் கலை­ஞ­ரின் நூற்­றாண்டு விழா நடை­பெ­றும் என்றும், அவ்­வாறு அடுத்­தாண்டு நடை­பெ­றும் கலை­ஞ­ரின் நூற்­றாண்டு விழா மேடை­யில், பா.ஜ.க. அல்­லாத பிர­த­மர் மேடை­யில் இருப்­பார் என்­றும், அப்­போது, மோடி­யும், அமித்­ஷா­வும் இந்­தி­யா­வி­லேயே இருக்­க­மாட்­டார்­கள் என்றும் ஆ.ராசா எம்.பி., தெரி­வித்­தார்.

இக்­கூட்­டத்­தில் தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டித் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி, மதி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ, 

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் மாநில செய­லா­ளர் கே.பால­கி­ருஷ்­ணன், இந்­திய கம்­யூ­னிஸ்ட் மாநில செய­லா­ளர் இரா.முத்­த­ர­சன், இந்­திய யூனி­யன்  முஸ்­லிம் லீக் தலை­வர் காதர்­மொ­கி­தீன், விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் தொல். திரு­மா­வ­ள­வன், மனி­த­நேய மக்­கள் கட்சி தலை­வர் ஜவா­ஹி­ருல்லா, கொங்­கு­நாடு மக்­கள் தேசி­யக் கட்சி பொதுச்­செ­ய­லா­ளர் ஈஸ்­வ­ரன் மற்­றும் தமி­ழக வாழ்­வு­ரி­மைக் கட்­சித் தலை­வர் வேல்­மு­ரு­கன் ஆகி­யோர் கலந்து கொண்டு உரை­யாற்­றி­னர்.

No comments:

Post a Comment