கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

25.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என மேனாள் எம்.பி. வி.அனுமந்தராவ் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉விடுமுறையில்லாமல் மனைவிக்கு 24 மணி நேரமும் வேலை - கணவனின் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉அரசின் ரிசர்வ் வங்கியே பணவீக்கத்தால் பொதுமக்களின் செலவு குறைவாக இருப்பதாகவும், இதனால் விற்பனை குறைந்துள்ளதாகவும், தனியார் முத லீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்த தீய சுழற்சி நமது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது. இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெறவிருக்கும் பாட்னா மாநாட்டின் தொடர்ச்சி, வளர்ந்து வரும் எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ஒரு ஒத்திசைவான முகத்தை வழங்குவதில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

👉உ.பி.யில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகம். ஜாதி மறுப்பு திருமணங்கள் இந்த குற்றங்களை தடுக்க உதவும் என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment