வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுடன் சமரசமா? ரிசர்வ் வங்கியின் பரிதாப நிலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுடன் சமரசமா? ரிசர்வ் வங்கியின் பரிதாப நிலை!

புதுடில்லி, ஜூன் 16 - வேண்டுமென்றே கடனைத் திருப்பி செலுத்தாதவர் களுடன் சமரச தீர்வு காண வங்கிகளுக்கு அனுமதியளிக்க ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அழுத்தம் அளித்ததா என்று காங் கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சி யின் பொதுச்செயலாள ஜெய் ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக் கையின் விவரம்:

வங்கிகளில் பெற்ற கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத் தாதவர்கள் அல்லது கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று வகைப்படுத்தப்பட்ட கணக்கின் உரிமையாளர்களிடம், சமரச தீர்வு காண அல்லது அவர் கள் பெற்ற கடனை வாராக் கடன் என்று வங்கி நிதி அறிக் கையில் குறிப்பிட்டபோதிலும், அந்தக் கடனை வசூலிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற் கொள்ள வங்கிகளுக்கு அனுமதி அளித்து ரிசர்வ் வங்கி அறி வுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி அந்தக் கணக் கின் உரிமையாளர்கள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு புதிதாக கடன் பெறவும் அனுமதிக்கப்படுவர்.

இந்தக் கொள்கைக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட் டமைப்பு, 6 லட்சம் வங்கி ஊழி யர்களை கொண்ட அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங் கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தக் கொள்கை வங்கித் துறை மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு வழிவகுப்பது மட்டுமின்றி, வைப்புதாரர்களின் நம்பிக்கை யையும் குலைக்கும். இதனால் ஏற்படும் இழப்புகளின் சுமையை வங்கிகளும், அதன் ஊழியர்க ளும் சுமக்க நேரிடும் என்று வங்கி அதிகாரிகளும் ஊழியர் களும் தெரிவித்துள்ளனர்.

கடனை திருப்பிச் செலுத்த வேண்டியவர்களும், கடன் மோசடியாளர்களும் தங்களின் கடன்கள் குறித்த உண்மை நிலையை மறைக்க கையாளும் பல வழிகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அண்மையில் எச்சரித்தார். இந் நிலையில், கடனை வேண்டு மென்றே திருப்பிச் செலுத்தாத வர்களுடன் சமரச தீர்வு காண் பது தொடர்பாக வங்கிகளுக்கு அனுமதி அளித்து ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களை வழங்கியுள் ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அழுத்தம் அளித் ததா? இதனை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும்.

நேர்மையான இந்தியர்கள் தங்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்த போராடுகின்றனர். நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா போன்ற கடன் மோசடியாளர்கள் மறுவாழ்வு பெற ரிசர்வ் வங்கியின் அறிவு றுத்தல் மூலம் ஒன்றிய அரசு பாதை ஏற்படுத்தி தந்துள்ளது.

தனது அறிவுறுத்தல்களை ரிசர்வ் வங்கி உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடன் மோசடி யாளர்கள் மற்றும் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களுடன் வங்கி கள் சமரசம் மேற்கொள்வதை ரிசர்வ் வங்கி தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment