குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருக்க பெற்றோருக்கு பாடம் டிஜிட்டல் இந்தியா படுத்தும் பாடு! சிறுவனின் இணைய விளையாட்டால் லட்சக்கணக்கில் பணம் இழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருக்க பெற்றோருக்கு பாடம் டிஜிட்டல் இந்தியா படுத்தும் பாடு! சிறுவனின் இணைய விளையாட்டால் லட்சக்கணக்கில் பணம் இழப்பு

அய்தராபாத், ஜூன் 16 - ஆன்லைன் கேம் மீதான மோகத்தால் அய்தராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளான். அண்மையில், சீன தேசத்தில் ஆன்லைன் கேம் மோகத் தால் 13 வயது சிறுமி ஒரு வர் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்து 52 லட்ச ரூபாயை செலவழித்தாள் என்கிற தகவல் வெளியானது.

அய்தராபாத்தின் அம்பேர்பேட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் தனது தாத்தாவின் அலைபேசியில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடி உள்ளான். அவர் 11ஆம் வகுப்பு படித்து வருகி றான். இந்த கேமை அலைபேசியில் இலவசமாக விளையாடலாம்.  இந்த கேமில் அடுத்தடுத்த நிலை (லெவல்) நோக்கி ‘முன்னேற... முன்னேற...’ சிறிது சிறிதாக பணம் செலவழிக்க தொடங்கி ரூ.10,000 வரையில் இது சென்றுள்ளது.

இப்படியே வீட்டுக்கு தெரியாமல் இதை அந்த சிறுவன் தொடர்ந்துள்ளான். அது அப்படியே 1.45 லட்சம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை சென்றுள்ளது.

இது தெரியாமல் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க சிறுவனின் தாய், தான் கணக்கு வைத்துள்ள எஸ்பிஅய் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது கணக்கில் இருந்த 27 லட்ச ரூபாயும் இல்லை என அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து தனியார் வங்கியான ஹெச்.டி. எஃப்.சி வங்கியில் இருந்த 9 லட்சம் ரூபாயும் இல்லை என்பதை அறிந்ததையடுத்து, அதோடு இதற்கு காரணம் தனது மகனே என்பதையும் அறிந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இது தொடர்பாக அவர் காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. அந்தச் சிறுவனின் தந்தை காவல் துறை அதிகாரியாக பணியாற்றி உயிரிழந்தவர். அந்த 36 லட்ச ரூபாயும் அவரது உழைப்பில் ஈட் டப்பட்டுள்ளது. இதில் அவர் மறைவுக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட பணமும் அடங்கும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment