‘அட முருகா!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

‘அட முருகா!'

மாற்று மதத்தினர் அனுமதியா?பழனி கோவிலில் புது சர்ச்சை!

பழனி, ஜூன்25- ‘பழனி முருகன் கோவிலில் ஹிந்து அல்லாதவருக்கு அனுமதி இல்லை' என, வைக்கப்பட்ட அறிவிப்பை அகற்றியதால், ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் முன், ‘ஹிந்துக்கள் அல்லாத வருக்கு அனுமதி இல்லை' என, அறிவிப்பு வைக்கப்பட் டிருந்தது. கும்பாபிஷேகம் நடந்த சமயத்தில் அந்த அறிவிப்பு அகற்றப்பட்டது.

சில நாட்களுக்குமுன், பிற மத பெண்கள் இருவர் வின்ச் ஸ்டேஷன் வழியே மலைக்கோவில் செல்ல முயன்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்தனர்.

வின்ச் அதிகாரியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஹிந்து அமைப்பினர் திரண்டதால், மாற்று மதத்தினர் திரும் பினர்.

அதன்பின், வின்ச் ஸ்டேஷன் முன், ‘ஹிந்துக் கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லை' என, அறிவிப்பு வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு அந்த அறிவிப்பு அகற்றப்பட்டது.

தகவலறிந்த ஹிந்து அமைப்பினர் வின்ச் ஸ்டே ஷன்முன் திரண்டனர். அகற்றப்பட்ட அறிவிப்பை உடனடியாக மீண்டும் அதே இடத்தில் வைக்க வலி யுறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.

கோவில் அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஹிந்து அமைப்பினர் ஏற்க வில்லை. டி.எஸ்.பி., சரவ ணன் தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

‘தினமலர்', 25.6.2023, பக்கம் 3

திராவிடர் கழகத்தினர் கடவுள் இல்லை என்று சொன்னால், காததூரம் கேட்கும் அளவுக்குக் கத்தும் காவிகள், இப்பொழுது என்ன செய்துள்ளார்கள்? பழனி முருகன் மற்ற மதத்துக்காரர்களுக்கான கடவுள் அல்ல - அப்படி என்றால் 'எல்லார்க்கும் கடவுள் என்ற ஒன்று இல் லவே இல்லை!' என்று இவர் களே ஒப்புக்கொண்டு விட் டனர் என்றுதானே பொருள்!

கடவுள் என்ற ஒன்று கிடையவே கிடையாது. மதத்தை ஏற்படுத்திய மனி தர்கள்தான், கடவுள்களை யும் தங்கள் மதத்துக்காகக் கற்பித்து, ‘‘காப்புரிமை'' கோருகிறார்கள்.

அதேநேரத்தில், வேளாங்கண்ணி மாதா கோவிலிலும், நாகூர் தர் காவிலும் எந்த மதத்துக்காரர் களும் தாராளமாக செல்ல லாம், வழிபடலாம்!

ஹிந்துக் கோவில்களில் மட்டும் மற்ற மதக்காரர்கள் சென்றால் கடவுளுக்குத் தோஷம் வந்துவிடுமாம். கல்லுக்குக் கூட தோஷம் கற்பிக்கும் இந்தத் துவேஷி களை என்னவென்று சொல்லுவது!

கடவுள் எங்கும் நிறைந் தவர் - உருவமற்றவர் - சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கொட்டி அளப்பது எல்லாம் சுத்தப் ‘‘புருடா'' என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டதா, இல்லையா?

 -  மயிலாடன்


No comments:

Post a Comment