கலைஞரின் சமூகநீதிப் பாதையை பின்பற்றுகிறார் மு.க.ஸ்டாலின் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

கலைஞரின் சமூகநீதிப் பாதையை பின்பற்றுகிறார் மு.க.ஸ்டாலின் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பாராட்டு!

திருவாரூர், ஜூன் 21- கலைஞரின் சமூகநீதிப் பாதையை பின்பற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பாராட்டியுள்ளார்.

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பங்கேற்றார்.

விழாவில் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு,

இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நினைவேந்தலை செலுத்துகிறேன். புகழ்பெற்ற தலைவரான மறைந்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையையும். பாரம்பரியத் தையும் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, நமது ஒட்டு மொத்த தேசத்தின் ஆட்சியில் அவ ரது எண்ணங்கள் மற்றும் கொள்கைகளின் தொடர்ச்சியைப் பற்றிச் சிந்திக் கவும் நாம் இங்கே கூடியுள்ளோம். அவரது கருத்துக்கள் யாவும் நமது மகத்தான தேசம் முழுவதும் பரவி தலைமுறைகளுக்கும் தொடர்ந்து எதிரொலித்து நமக்கு ஊக்கமளிக்கின்றன.

விளிம்பு நிலை சமூகங்களை மேம்படுத்த பாடுபட்ட கலைஞர்! 

சமூக நீதிக்கான சிறந்த பிரதிநிதியாகவும், சமூக ஏற்றத்தாழ் வுகளை நிவர்த்தி செய்வதற்கும், விளிம்பு நிலை சமூகங்களை மேம் படுத்துவதற்கும் பல கொள்கை கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் கலைஞர் கருவியாக செயல்பட்டார்.

கல்வி நிறுவனங்கள், அரசுப்பணிகள் மற்றும் அரசியல் பிரதி நிதித்துவம் ஆகியவற்றில் பட்டியலின ஜாதிகள், பட்டியலின பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட சமூக ரீதியாக பின் தங்கிய எல்லா சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டு கொள்கைகளை செயல்படுத்தி, அதை விரிவுபடுத்து வதிலும் அவர் முக்கிய பங்காற்றினார். அந்தக் கொள்கை கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சம வாய்ப்புகளை வழங்குவதையும், சமூக ரீதியிலான இயங்கும் முறைகளை மேம்படுத்துவதையும் நோக்க மாகக் கொண்டுள்ளன. 

கலைஞரின் தலைமையில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகத்தினரை மனதில் கொண்டு எண்ணற்ற நலத்திட் டங்களை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டங்களில் மானிய விலையில் உணவு தானியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வருமானம் பெறுவதற்கான உதவி ஆகியவை அடங்கும். 

இத்தகைய முன்முயற்சிகள் வறுமையைப் போக்கு வதையும், பாதிக்கப்பட்ட மக்களின் மேம்படுத்துவதையும் வாழ்வாதாரத்தை நோக்கமாகக்  கொண்டுள்ளன.

சமத்துவமின்மையை அகற்ற 

பாடுபட்ட கலைஞர்! 

பாரம்பரிய அடிப்படையில், மறைந்த கலைஞர் அவர்கள் சமூக நீதி, பகுத்தறிவு மற்றும் மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலியுறுத்திய திராவிட சித்தாந்தத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவர் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச் சாரத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்பட் டார். மேலும், மொழி, ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட பாகு பாடு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை அகற்றவும் துடிப்புடன் செயல்பட்டார்.

புவியியல் ரீதியாக நாம் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும் கூட, அவர் உரு வாக்கிய திராவிட மாடல் என்பது நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கிறது என்பதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான உரிமைகள், அதிகாரமளித்தல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் அவருக்கிருந்த உறுதிப்பாட்டையும் நான் இங்கே வலியுறுத்த விரும்பு கிறேன். பெண்களுடைய அரசியல் பங்களிப்பை அதி கரிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு. பாலின சமத்துவ அடிப் படையிலான கொள்கைகளை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவர் அறிமுகப்படுத்தினார்.

கலைஞரின் அர்ப்பணிப்பு நமக்கு 

சிறந்த வழிகாட்டி!

ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப் பதற்காகச் செயல்படும் ஜாதி எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை அவர் தீவிரமாக ஆதரித்தார். ஜாதி அடிப்படையில் ஏற்படும் வன்முறைகளைக் கண்டித்த அவர், ஜாதிகளுக்கு இடையேயான கலப்பு திருமணங்களை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தின் பழமையான படிநிலைகளுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டார்.

நம்மைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு, மறைந்த கலைஞர் அவர்களின் தலைமைத்துவமும், அரசியல் வாழ்க்கையும் நாம் எதற்காகப் பாடுபட வேண் டும் என்பதற்கான உத்வேகமாகவும், சிறந்த வழிகாட்டி யாகவும் இருக்கிறது.

அவரது எண்ணங்களும், கொள்கைளும் இந்தியா வுக்கே பொருத்தமாக இருக்கும் வகையில் அமைந் துள்ளவையாகும். சமூக நீதி நிலவும் வகையில், சமத்துவம் தழைத்தோங்கும் விதத்தில், விளிம்புநிலை மக்கள் ஆறுதல் அடையக் கூடிய எதிர்காலத்தை நோக்கி அவரது இலட்சியங்கள் திசைகாட்டியாகச் செயல்படுகின்றன.

கலைஞரின் கொள்கை மாண்பை, மு.க.ஸ்டாலின் சுமந்து செல்கிறார்!

இன்று, நமது மகத்தான தேசத்தின் வரலாற்றில் நாம் ஒரு முக்கியமான பாதையில் நிற்கும் நிலையில், தேசிய அளவில் கலைஞர் அவர்களின் ஆட்சி மாடல் அளிக்கும் உணர்வை நாம் உள் வாங்குவது அவசியம். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அனுதாபம் ஆகியவற்றை நமது நிர்வாகக் கட்டமைப்பின் மய்யக் கருத்தாக இருக்கும்படி ஒன்றிணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், ஒவ்வொரு குடிமகனும் தன்னை மதிப்புமிக்கதாக உணர்வதுடன், ஒவ்வொருவருடைய குரலும் கேட்கப்படுவதாக இருக்கும்.

கலைஞர் அவர்களின் சமூக நீதி காக்கும் கொள்கை மாண்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமந்து செல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள், மதிப்பிற்குரிய லாலு பிரசாத் மற்றும் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் களுடைய வழிகாட்டுதலின் கீழ் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் பீகார் மாநிலத்தில் சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் கொடியை உயர்த்தி பிடித்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞர் அவர்க ளின் கொள்கைகள் வாழ்க..! 

- இவ்வாறு தேஜஸ்வி உரையாற்றினார்.

No comments:

Post a Comment