பா.ஜ.க. ஆட்சியில் மணிப்பூர் பற்றி எரிகிறது வன்முறையில் 11 பேர் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

பா.ஜ.க. ஆட்சியில் மணிப்பூர் பற்றி எரிகிறது வன்முறையில் 11 பேர் மரணம்

இம்பால், ஜூன் 15 மணிப்பூரில் நேற்றிரவு (14.6.2023) ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் குகி பழங்குடி மக்களுக்கும் மெய்த்தி சமூக மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆ-ம் தேதி முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. 

இந்நிலையில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் நேற்றிரவு 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள் ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமென்லோக் என்ற கிராமத் தில் இந்த தாக்குதல் நிகழ்ந் துள்ளது. முதலில், காமென் லோக் கிராமத்தில் உள்ள வீடுகள் மீது ஆயுதக் குழுக்கள் குண்டுகளை வீசி உள்ளனர். இதில், வீடுகளில் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காய மடைந்துள்ளனர். இந்த குண்டு வீச்சில் இருந்து தப்பிக்கும் நோக் கில் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் மீது ஆயுதக் குழுக் களைச் சேர்ந்தவர்கள் துப் பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதிலும், பலர் உயிரிழந்துள் ளனர். பலர் காயமடைந்துள் ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதக் குழுக்களுக் கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக செய்தி வெளியாகி உள்ளது. 

ஆயுதக் குழுக்களிடம் நவீன ஆயுதங்கள் உள்ளதாகக் கூறப் படுகிறது. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎல்பி தலைவர் ஓக்ராம் இபோபி, "மணிப்பூரில் சமீபத் தில் சட்டமன்றத் தேர்தல் நடந்த போது பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மணிப்பூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், இன்று அவர்கள் யாரும் இங்கு வருவதில்லை. மே 3-ஆம் தேதி முதல் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தும் பிரதமர் மோடி இது குறித்து பேச மறுக்கிறார். 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் டில்லி சென்று இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரில் வலியுறுத்த இருக்கிறோம். மாநில அரசும், இந்த வன்முறை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" எனத் தெரிவித்தார்.  இதனி டையே, இந்த வன்முறையைக் கண்டித்து பெண்கள் அமைப் பைச் சேர்ந்தவர்கள் மேனாள் முதலமைச்சர் ஆர்.கே. தோரேந் திராவின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, என்ஆர்சி எனப் படும் தேசிய குடிமக்கள் பதி வேட்டை அமல்படுத்த வேண் டும் என்றும், மெய்த்தி சமூக மக்களிடம் பாகுபாடு காட்டும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படையினரை, மணிப்பூரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என் றும் அவர்கள் வலியுறுத்தினர்.


No comments:

Post a Comment