சென்னையின் 109-ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

சென்னையின் 109-ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

சென்னை, ஜூன் 30  சென்னை காவல் ஆணையரான  சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், புதிய 109ஆவது காவல் ஆணையராக  சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

1968ஆம் ஆண்டு டில்லியில் பிறந்தவரான சந்தீப் ராய் ரத்தோர், குவைத் நாட்டில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். வேலூர் இன்ஸ்டியூட்டில் பேரிடர் மேனேஜ்மெண்ட்டில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசும் புலமை வாய்ந்தவர் 1992 ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் அய்பி.எஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பரமக்குடி மற்றும் நாகர்கோவில் மாவட்டத்தில் பணியை துவங்கினார். அதன் பிறகு 1996ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், அதன் பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை ஆணையராகவும் பதவி வகித்தார் 1998 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் துணை ஆணையராக சந்திப் ராய் ரத்தோர் இருந்தபோது கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தார். 1998 ஆம் ஆண்டு டில்லி திகார் சிறையில் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றினார்

2003ஆம் ஆண்டு சிபிசிஅய்டியில் கண்காணிப்பாள ராகயாக இருந்த போது முத்திரைத்தாள் மோசடி தொடர் பாக வழக்கை விசாரணை மேற்கொண்டார். 2005 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது அம்மாவட்ட காவல் துறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுக் கொடுத்தார். 2015 ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மீட்புப்படை தலைவராக இருந்த போது கேதர் நாத்தில் ஏற்பட்ட வெள்ளம், சென்னை முகலி வாக்கத்தில் ஏற்பட்ட கட்டட விபத்து உள்ளிட்ட பேரிடர் களை திறம்பட கையாண்டு உள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சிறப்பு அதிரடிப்படை தலைவராக இருந்த போது நக்சலைட் களுக்கு எதிரான முக்கோண எல்லைகளின் பாதுகாப் புகளை வடிவமைத்து இருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராக இருந்த போது அதிகப்படியான இளைஞர்களை காவல்துறையில் துறையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  இந்த நிலையில் தற்போது சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றுள்ளார்.


No comments:

Post a Comment