புதுச்சேரி ஆளுநர் மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன் மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

புதுச்சேரி ஆளுநர் மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன் மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி,மே29 - புதுவை மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலா மாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பணிகளை போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.

புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக் கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட வில்லை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.

புதுவையில் பொதுப்பணித் துறையில் 20 சதவீத கமிஷன் வாங்கு கிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணை யர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட் டுள்ளனர் என நினைக்கிறோம்.

ஆனால் உண்மையில் நகரப்பகுதி யில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுவனமான ரயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் முகாந்திரம் இருந்த தால் அதனை தலைமை செயலாளர் ஒன்றிய உள்துறைக்கு அனுப்பியுள் ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.

முதலமைச்சரின் உத்தரவு இல் லாமல் அவர்கள் இவ்வாறு நடந் திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வ தில்லை. எனக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல் கிறார். விரைவில் ஆளுநர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.

இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டில்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநிலத் தகுதி குறித்து எதுவும் பேச வில்லை. -

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


No comments:

Post a Comment