உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம்

விருதுநகர்,மே 4 - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம், உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உணவுப் பொருட் களின் தரம், கலப்படம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கள் ஆய்வு நடத்தி, அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுகளுக்கு அனுப்பி, அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது.

 உணவுப் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து உடனுக்குடன் முடிவு கள் அறிந்து கொள்ள உணவுப் பாது காப்புத் துறை சார்பில் நடமாடும் ஆய்வகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில், உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக் குடன் ஆய்வு செய்ய உணவு பாது காப்புத் துறையின் நடமாடும் ஆய்வகம் 3.5.-2023 முதல் 31.5.-2023 வரை வலம் வர ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் உணவுப் பொருள் கலப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று சோத னைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இந்த நடமாடும் ஆய்வகத்தில், கடைகளில், கிடங்குகளில் சேகரிக்கப் படும் மாதிரிகளை உடனடியாக பரிசோ தனை செய்து முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மே -2023 மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முறையே விருதுநகர் நகராட்சி, அல்லம்பட்டி மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதிகளிலும், 5, 8 மற்றும் 9 தேதிகளில் அருப்புக் கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதிகளிலும், 10 மற்றும் 11 தேதிகளில் நரிக்குடி, திருச்சுழி பகுதிகளிலும், 12, 15 மற்றும் 16 தேதிகளில் சாத்தூர், தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணைப் பகுதிகளிலும்;, 17, 18 மற்றும் 19 தேதிகளில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளிலும்,

22 மற்றும் 23 தேதிகளில் சாட்சியாபுரம், வத்திராயிருப்பு பகுதி களிலும், 24, 25 மற்றும் 26 தேதிகளில் சிறீவில்லிப்புத்தூர் நகர், மம்சாபுரம் மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதிகளி லும் 29, 30 மற்றும் 31 தேதிகளில் இராஜபாளையம், செட்டியார்பட்டி மற்றும் சம்சிகாபுரம் பகுதிகளிலும்; ஆய்வு கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பொருள்களின் தரத்தினை நடமாடும் ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment