கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

28.5.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

👉மோடி தலைமையில், நாடு அவசர நிலை காலத்தை நோக்கி செல்கிறது என தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் எச்சரிக்கை.

👉 ஆளுநர் அலுவலகம்  தவறாக பயன்படுத்தப்படுகிறது, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை

👉 மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாற்று திரிபு வாதத்தில் ஈடுபட்டுள்ளது, என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கண்டனம்.

👉டில்லியில் நடைபெற்ற திட்ட ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் 11 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு.

தி இந்து

👉ஜாதிவாரி கணக்கெடுப்பு தகவல்கள் வெளியானால், ஹிந்துத்துவா குடையின் கீழ் வாக்காளர்களை இணைக்க முடியாது என்று பாஜக அஞ்சுகிறது என சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் கருத்து.

👉டில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில், இளங்கலை பட்டதாரிகளுக்கான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை எழுதிய உருது அறிஞர் முஹம்மது இக்பால் பற்றிய குறிப்புகளை  நீக்க முடிவு.

 தி டெலிகிராப்:

👉 'செங்கோல்' தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்கிறார் இலக்கிய மற்றும் சமூக விமர்சகர் என்.இ. சுதீர். ஜவஹர்லால் நேருவுக்கு செங்கோல் வழங்குவது ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை மாற்றுவதை அடையாளப்படுத்தி இருந்தால், விழா நாடாளுமன்ற இல்லத்திலோ அல்லது வைஸ்ராயின் இல்லத்திலோ (இப்போது குடியரசுத் தலைவர் பவன்) நடைபெற்றிருக்கும் என்கிறார் இலக்கிய மற்றும் சமூக விமர்சகர் என்.இ. சுதீர்.

👉 டில்லி பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்பில் காந்தியாருக்குப் பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம். பிரிவினை மற்றும் ஹிந்து ஆய்வுகள் என்று இரண்டு ஆய்வு மய்யங்கள் திறப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment