சிலம்பத்தில் புதிய உலக சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

சிலம்பத்தில் புதிய உலக சாதனை

திருச்சி,மே 2 பன்னாட்டு உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி கலைஇளமணி மோ.பி. சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார்.அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரின் மகன்கள் மித்ரன், பிரஜன் ஆகியோர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். 

இந்த மூவரின் சாதனை கள் துபாயில் இயங்கி வரும் அய்ன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த உலகசாதனையை துபாயில் இருந்து வருகை புரிந்த அய்ன்ஸ்டன் புத்தக இயக்குநர் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் மோனிகாரோஷினி ஆகியோர் ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.  மேலும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற 280 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் சுழற்சி முறையில் ஒரு குழுவிற்கு 40 பேர் என 7 குழுவாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்கள்.

நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப இளையோர் சம்மேளன இந்திய தலை வர் மருத்துவர் செந்தில் குமார்  தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார்.

No comments:

Post a Comment