சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த தானியங்கி இயந்திரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த தானியங்கி இயந்திரம்

சென்னை, மே 6- சென்னை மாநக ராட்சியுடன், பெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் சொத்து வரி செலுத்தும் முறையினை மேயர் ஆர்.பிரியா நேற்று (5.5.2023) ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையா ளர்கள் இணைய தளம், வரி வசூலிப் பாளர்கள், பாரத் பில் பேமன்ட் சிஸ் டம், சென்னை மாநகராட்சி வளாகங் களில் அமைந்துள்ள இ-சேவை மய்யங் கள் மூலமாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், க்யூர் கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, காசோலை மற்றும் வரை வோலை வாயிலாக தங்களது சொத்து வரியினை எளிதாக செலுத்த வழிவகை கள் ஏற்படுத்தப்பட் டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியுடன் பெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரியினை செலுத்தி ரசீதுகளை பெற வழிவகை செய்யப்பட் டுள்ளது. தானியங்கி இயந்திரத்தின் செயல் பாட்டினை மேயர் ரிப்பன் மாளிகை வளா கத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த தானியங்கி இயந்திரங்கள் சென்னை மாநகராட்சியின் தலைமையிடம், வட் டார துணை ஆணையா ளர்கள் அலுவலக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ளது. நிகழ்ச் சியில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் மஹாஜன், மாமன்ற ஆளுங் கட்சித் தலைவர் ராம லிங்கம், நிலைக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன், மாநகர வருவாய் அலுவலர், வருவாய்த் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment