ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: "வழக்குகள் போட்டால் எதிர்கொள்வேன், எனது குற்றச்சாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" என்று அண்ணாமலை கூறுகிறாரே?                            - க.ராஜா, திருவண்ணாமலை

பதில் 1 : வழக்குகள் போட்டால் - இவரென்ன - எவரானாலும் எதிர்கொள்ளாமல் ஓடி விட முடியாது. இது ஒரு பதிலா? வெறும் வாய்ச்சவடால்!

---

கேள்வி 2: எதிர்காலத்தில் 80 விழுக்காடு 'செயற்கை நுண்ணறிவு' பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள். அப்போது மனித ஆற்றல் எப்படி செலவாகும்?                                                           - மு.திருநாவுக்கரசு, திருத்தணி

பதில் 2 : வளர்ச்சியும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும், கேடுகளின் அச்சுறுத்தலும் மனித குலத்தின் சவாலாக இருக்கின்றன!

---

கேள்வி 3: "விலைவாசி உயர்வு குறித்து எனக்கும் கவலைதான்" என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?

                                                                                             - தெ.மாரியப்பன், நெல்லை

பதில் 3 : கட்டுப்படுத்த வேண்டியவருக்கே கவலை வந்துவிட்டது என்றால் நிலைமை கட்டுமீறி விட்டது என்றுதானே பொருள்?

----

கேள்வி 4: வாக்குப்பதிவு அன்று கோவில்களில் பிரதமர் மோடி வழிபாடு செய்வதை தொடர் நேரலையாக அனைத்துத் தொலைக் காட்சிகளும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்கின்றனவே?          - ப.அருணாசலம், ஒசூர்

பதில் 4 : ஓட்டு வாங்க இப்படி ஓர் 'உத்தி'. கருநாடகத் தேர்தலை மனதிற்கொண்டு சூடானில் 'ஆபரேசன் காவிரி'? வந்த மாதிரி!

----

கேள்வி 5: நீட் தேர்வில்  மொத்தம் 200 கேள்விகளில் 165 கேள்விகள்  தமிழ்நாடு அரசு  பாடப் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருக்கிறதே - சமச்சீர்கல்வி எப்படி அவர்களுக்கு இனித்தது?   - ம.கனியமுது, திருச்சி

பதில் 5 : கடைசியில் தமிழ்நாடுதான் எவருக்கும் தஞ்சமோ? வாழ்க 'திராவிட மாடல்'!

----

கேள்வி 6: மணிப்பூர் குறித்து இன்றுவரை பிரதமர் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லையே, குறைந்த பட்சம் அந்த மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று 'மன் கி பாத்' போன்றாவது பேசலாமே? அங்கு பா.ஜ.க. பெரும்பான்மை ஆட்சிதானே நடக்கிறது?      - வெ.நடராஜன், மதுரை

பதில் 6 : "மணிப்பூரா? கலவரமா? அதென்ன? விளம்பரத்தில் மங்கி பாத்தான் அடிக்கடி உள்ளது" என்ற நிலைதான்.

---

கேள்வி 7: வேலையில்லாதோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஒன்றிய பொருளாதார கண்காணிப்பு மய்யம் கூறியுள்ளதே?                                                         - பு.திருவேங்கடம், வியாசர்பாடி

பதில் 7 : ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கிடைத்ததும் அவை பறந்தோடி விடுமே!

---

கேள்வி 8: தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற பிரிவினைவாதப் படங்களை சென்சார் எப்படி அனுமதிக்கிறது?

                                                                                     - கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 8 : சென்சார் போர்டு யார் வசம்? பிறகேன் இக்கேள்வி?

---

கேள்வி 9: நீட் தேர்விற்கு தயாராக இருங்கள் என்று மாணவர்களிடம் ஆளுநர் கூறுகிறாரே?                                                             - ச.கணேசன், காஞ்சி

பதில் 9 : அவர் ஒரு தனி ராஜ்ய அதிபதி போல - தினசரி விளம்பர ஊடக உதவி உபயம் இது!


No comments:

Post a Comment