சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதலமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதலமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை

சிங்கப்பூர், மே 25 - புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் 23.5.2023 அன்று பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் மேற்கொள் ளப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது சிங்கப் பூர் உள்துறை அமைச்சர் இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம் படுத்துதல், உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினார். மேலும், சிங் கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதல மைச்சரிடம் சண்முகம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக ஒன் றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறிய முதலமைச்சர், சென் னையில் அடுத்த ஆண்டு நடக்க வுள்ள முத லீட்டாளர்கள் மாநாட் டில் பங்கேற்க சண்முகத்திற்கு அழைப்பு விடுத்தார். சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, இன்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் புறப்படுகிறார். சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந் தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அங்கு முதலீட் டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந் தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன். தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நில மான தமிழ்நாட்டின் அன்போடு அவர்களிடையே உரையாற்றி னேன். உலகெங்கும் வாழும் தமி ழர்களின் நலனையும் உரிமைக ளையும் காக்க திராவிட முன் னேற்றக் கழகமும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப் பதிந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment