திருநங்கை சமூகத்துக்குக் கிடைத்த பெருமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

திருநங்கை சமூகத்துக்குக் கிடைத்த பெருமை!

2019-  ஆம் ஆண்டில்  “பத்மசிறீ விருது’ பெற்ற  முதல்  திருநங்கை  நர்த்தகி நட்ராஜ்,  மேலும் பெருமை  பெற்றுள்ளார்.  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அமைத்துள்ள தமிழ்நாடு  மாநில  வளர்ச்சிக்  கொள்கை  ஆலோசனைக் குழுவில்  இடம் பெற்றுள்ளார்.  முதன் முதலாக  திருநங்கை  ஒருவருக்கு  வாய்ப்பளித்திருப்பது,  திருநங்கை சமூகத்திற்கு  அளிக்கப்பட்ட  பெருமையாகக்  கருதப்படுகிறது.

சிறுவயது முதலே  பரதம்  கற்றுக் கொள் வதில்  பெரிதும் ஆர்வ மாக இருந்த நர்த்தகி  நட்ராஜ்.  தஞ்சாவூர்  பாணி பரத நாட்டியம் பயிற்சியளிப்பதில் பிர பலமான  நடன ஆசிரியர்  கே.பி.கிட்டப்பா  பிள்ளையிடம்,  தனக்குப்   பயிற்சியளிக்கும்படி  கேட்டபோது  முதலில்  அவர் மறுத்துவிட்டாராம்.  தான் ஒரு திருநங்கை  என்பதால்  மறுத்து விட் டாரோ என்று நர்த்தகி  நட்ராஜ்  சந்தேகப்பட்டார்.  ஆனால் இவருக்கு  உண் மையிலேயே  நடனம்  கற்றுக் கொள்ள ஆர்வம்  இருக்கிறதா  என்பதை அறிந்து கொள்ளவே  மறுத்த கிட்டப்பா  பிள்ளை, பின்னர்  நடனப் பயிற்சியளிக்க  ஒப்புக் கொண்டாராம்.  14 ஆண்டுகள்  முறையாக  பயிற் சிப்  பெற்ற நர்த்தகி  நட் ராஜ்,  முறைப்படி  அரங் கேற்றம்  நடத்தி  பல முறை  மேடை நிகழ்ச் சிகள்  நடத்தி  பிரபல மானார்.

திருநங்கை  சமூகத் துக்கு ஒரு  எடுத்துக்காட் டாக  விளங்கி வரும் நர்த்தகி  நட்ராஜின்  வாழ்க்கை,  தமிழ்நாடு  பள்ளிகளில்  பதினோராம்  வகுப்பு  தமிழ் பாடப் புத்தகத்தில்  இடம் பெற் றிருப்பது இன்னுமொரு சிறப்பாகும்.  பரத நாட்டி யம் கற்றுக்  கொள்வதில்  திருநங்கைகளுக்கும் இடம் உண்டு  என்பதை நிரூபித்தவர், தமிழ்நாடு முதலமைச்சர்  தனக் களித்த  அங்கீகாரத்தை  திருநங்கைகளுக்கு அளித்த பெருமையாகக் கருதுகிறார்.

No comments:

Post a Comment