மணிப்பூர் கலவரம்: உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

மணிப்பூர் கலவரம்: உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

புதுடில்லி, மே 31- மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்ச ராக பிரேன் சிங் இருந்து வரு கிறார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சமூகத்தினர் தங்களைப் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான தகுதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங் களில் வீடுகளுக்குத் தீ வைக்கப் பட்டது. மேலும் இந்த கலவரத் தில் 70 பேர் உயிரிழந்தனர். ஏரா ளமானோர் பலத்த காயமடைந்த னர். கலவரக்காரர்களைக் கண் டதும் சுட உத்தரவும் பிறப்பிக் கப்பட்டது. பாதுகாப்பு நட வடிக்கைக்காக 144 தடை உத் தரவு அமல்படுத்தப்பட்ட நிலை யில் மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் அனைத்து ரயில் களும், சாலை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் நடை பெற்ற இடத்தை ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர் கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட் டது. இயல்பு வாழ்க்கை தற்போது மெல்லத் திரும்பி வருகிறது.

கலவரத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 170க்கு விற்கப்பட்டது. ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை கள்ளச் சந்தையில் ரூ. 1800க்கு விற்கப்பட்டது. 

ரூ. 900க்கு விற்ற ஒரு மூட்டை அரிசி ரூ. 1800க்கு விற்கப்பட்டது. இதேபோன்று பால், முட்டை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந் துள்ளது. மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத தால் பொதுப் போக்குவரத்திற்கு சரிவர அனுமதி அளிக்கப்பட வில்லை. அதனால் வெளியூரில் இருந்து வரும் எரிவாயு உருளை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு மணிப்பூரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், மீண்டும் கலவரம் ஏற்படும் என்ற பயத்தால் காய் கறிகள் கொண்டு வரும் லாரிகள் கூட மணிப்பூருக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. 

அதனால் ஏற்கெனவே கடைகளில் கையிருப்பு உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார். 

மணிப்பூர் கலவரம் தொடர்பாக உரிய நடவடிக்கை களை எடுக் கக் கோரி குடியரசுத் தலைவரிடம் மல்லிகார்ஜுன கார்கே முறையிட்டார். காங் கிரஸ் கட்சியின் மூத்த தலை வர்கள் உடன் இருந்தனர்.தித்த காங்கிரஸ் தலைவர்கள் 

No comments:

Post a Comment