மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

கிராமங்கள்தோறும் கழகக் கொடி, பெரியாரியல் பயிற்சி வகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்துவது என முடிவு

மன்னார்குடி,மே30 - மன்னார் குடி மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் 27.5.2023 அன்று மாலை 5:00 மணி அளவில் மன்னார்குடி .பெரியார் படிப்பகத்தில் கழக மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன் தலைமையில் சிறப்புடன் நடை பெற்றது.

பொதுக்குழு தீர்மானங்கலை விளக்கியும், கழகப் பொறுப்பாளர் கள் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக விளக்கிப் பேசினார்கள். 

தொடர்ந்து, கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன். மாவட்டச்செயலாளர் கோ.கணேசன், மாவட்ட அமைப் பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், பொதுக் குழு உறுப்பினர் ப.சிவஞானம், பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்டத் தலைவர் தங்க.வீரமணி, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப் பாளர் இரா.கோபால், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன் ஆகியோர் கழக செயல்பாடுகளை பற்றி பேசினார்கள்.

கூட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய கழக தலைவர் மு.தமிழ்ச் செல்வன், கழக மாவட்டத் துணைச் செயலாளர் வீ.புட்ப நாதன், நீடாமங்கலம் ஒன்றிய கழக துணைத் தலைவர் இரா.சக்திவேல், மேலவாசல் கோ.திரிசங்கு, கழக மன்னை நகரச் செயலாளர் மு.இராமதாஸ், பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி, கழக மாவட்டத் துணைத் தலைவர் ந.இன்பக்கடல், கழகப் பேச்சாளர் இராம.அன் பழகன், நீடாமங்கலம் நகர இளை ஞரணி தலைவர் இரெ.அய்யப்பன், கவிஞர் கோ.செல்வம், எம்.கோவிந் தராசு ,நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப் பன், புள்ளவராயன் குடிக்காடு கிளைக் கழகத்தலைவர் க.கலிய மூர்த்தி, பகுத்தறிவாளர்கழக .பொறுப்பாளர் எஸ்.முரளிதரன், வே.அழகேசன், கோட்டூர் ஒன்றிய அமைப்பாளர் மு.தமிழ்மணி, மன்னை. சித்து, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் பேராசிரியர் காமராஜ், சித்தமல்லி எஸ்.கதிர வன்,  கோட்டூர் ஒன்றிய  கழக செயலாளர் எம்.பி.குமார்,  எம்.சி.ராமலிங்கம், மன்னார்குடி ஆர்.பாலகிருஷ்ணன், நீடாமங் கலம் ஒன்றிய கழக தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, கழகப் பேச் சாளர் வழக்குரைஞர் சு.சிங்கார வேலு, இளைஞரணி மாவட்ட செயலாளர் க.இளங்கோவன், மேலவாசல் அ.குணசேகரன் ஆகி யோர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். : 

தீர்மானம் - 1 : 

பெரியார் பெருந்தொண்டரும், ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்பு போராட்ட வீரரும், திராவிட விவசாய அணி மாவட்ட தலைவரு மான உள்ளிக்கோட்டை வே.குமா ரசாமி மறைவிற்கும், பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் நகர தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்த ராஜ் மறைவிற்கும், எடமேலையூர் ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரர் எஸ்.சவுந்தரராஜன் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 : 

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்திடும் வகையில் மன்னார் குடி மாவட்டம் முழுவதும் கழக செயல்பாடுகளை மிகவும் தீவிரமாக செயல் படுத்துவது எனவும், பொறுப் பாளர்கள் தீவிரமாக . செயல் படுவது எனவும் தீர்மானிக் கப்படுகிறது.

தீர்மானம் 3:

பெரியாரியல் பயிற்சி வகுப் பினை 11.6.2023 அன்று காலை முதல் மாலை வரை மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் நீடாமங்கலம் நகரத்தில் மிகச் சிறப்பாக நடத்துவது எனவும், 50 மாணவர்களை மாவட்டம் முழு வதிலும் இருந்தும் பங்கேற்கச் செய்வது எனவும்  தீர்மானிக் கப்படுகிறது.

தீர்மானம் 4 :

கழக அமைப்பு இல்லாத கிராமங்கள் தோறும் பிரச்சாரத் தினை கொண்டு சென்று மன்னார் குடிமாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள்தோறும் அமைப் பினை ஏற்படுத்தி, கழகக் கொடியினை ஏற்றி, பொறுப்பாளர்களை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப் படுகிறது

தீர்மானம் 5 :

ஆண்டுக்கு ஒரு முறை மூடநம்பிக்கை ஒழிக்கும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார கூட்டத்தினை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment