கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.5.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 டில்லி அரசுக்கு முக்கிய அதிகாரங்களை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து வெள்ளிக் கிழமை இரவு அவசரச் சட்டத்தை வெளியிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கை, “அரசமைப்பு கூட்டாட்சி கட்ட மைப்பை புல்டோசர் செய்வதாக” மோடி அரசு மீது எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம்.

தி ஹிந்து:

👉 தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் மக்கள் நலன் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய இரண்டின் மீது நம்பிக்கை வைத்து, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் சித்தராமைய்யா 75 வயதில் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்.

தி டெலிகிராப்:

👉  கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது மோடி அரசாங்கத்தின் போது அரசமைப்பின் அடிப்படை கொள்கைகளிலிருந்து இந்தியா விலகியதை கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் அமைப்புகளின் குழுவால் திரையிடல் நடத்தப் படுகிறது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment