கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க பிரேசில் மேற்கொள்ளும் முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க பிரேசில் மேற்கொள்ளும் முயற்சி

மறுசுழற்சி என்ற நடைமுறை உலகெங்கும் பல வழிகளில் கைகொடுக்கிறது. சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் அதன் பங்கு அதிகம். அதன் அடிப் படையில் பிரேசிலில் மேற்கொள்ளப் பட்ட ஒரு முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது. 

பிரேசிலின் ஈப்பனிமா பகுதியில் கடலுக்கடியில் உள்ள பிளாஸ்டிக் கழுவுகளான வலைகள் மற்றும் மிதப்பான்கள் போன்றவற்றை  எடுப்பதற்கு என்றே தனி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுக்களின் பணி கடலுக்கு அடியில் உள்ள நெகிழிக்கழிவுகளை வெளியே கொண்டுவருவதுதான். இது மிகவும் சிக்கலான பணி இருப்பினும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க இந்தப் பணியை மேற்கொள்வது தேவையான ஒன்றாக உள்ளது. 

 இவற்றை வெளியே கொண்டுவந்து கடல் வாழ் உயிரினங்களின் மாதிரிகளை அதில் செய்து அதனை வைக்க கண்காட்சி ஒன்றும் உருவாக்கப்பட் டுள்ளது, அக்கண்காட்சியில் நெகிழிப் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்திவருகின்றனர். 

சமீபத்தில் கைவிடப்பட்ட மிகபெரிய வலை ஒன்றை நீரின் வேகம் மற்றும் பல்வேறு இடர்களுக்கு இடையே வெளிக்கொண்டுவந்தனர். இங்கு மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் இது போன்ற கைவிடப்பட்டவலைகளை கடலிலிருந்து எடுத்து வந்து கண்காட்சி யில் வைத்து இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாதிரி களைச் செய்து காட்டுகின்றனர்.

இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு கடல்வாழ் உயிரினங்களுக்கு நெகிழிகளால் ஏற் படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுகிறது.  இந்தக்குழுவில் பலர் இணைந்து வருவதால் பிரேசில் கடல் பகுதி விரைவில் நெகிழி இல்லாத பகுதியாக மாறும் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment