வெளிச்சம் தரும் சுவர்க் கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

வெளிச்சம் தரும் சுவர்க் கல்

கண்ணாடிக் கட்டிகளை வைத்து சுவர்களை உருவாக்குவது தற்போது ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், அதைவிட வலுவான, அதே சமயம் நல்ல வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கும் ஒரு புதிய பொருளை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'எம்ப்பா' ஆராய்ச்சிக் குழும விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மிகவும் மென்மையான 'சிலிக்கா ஏரோஜெல்' துகள்களையும் கண் ணாடித் தகடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதியவகை கல்லுக்கு 'ஏரோபிரிக்ஸ்' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

ஏரோபிரிக்ஸ், ஆறு பகுதியிலும் சிலிக்கா ஏரோஜெல் கண்ணாடித் தகட்டினால் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை அடுக்கினால், வழக்கமான கட்டுமானப் பொருட் களைவிட அதிக பளுவைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

அதிக வெளிச்சத்தை ஏரோபிரிக் சுவர் உள்ளே விட்டாலும், வெப்பத்தை அனுமதிப்பதில்லை. எனவே, பகலில் மின் விளக்குச் செலவும், 'ஏசி' போடும் செலவும் மிச்சமாகிறது.

 கட்டுமானத்திற்கு வரவிருக்கும் ஏரோபிரிக்ஸ் பற்றி 'ஜர்னல் ஆப் பில்டிங் என்ஜினியரிங்' என்ற ஆய்விதழ் மிகவும் மெச்சியுள்ளது.


No comments:

Post a Comment