'ஆகாஷ்வாணி' ஒழிந்தது 'வானொலி' தோன்றிற்று! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

'ஆகாஷ்வாணி' ஒழிந்தது 'வானொலி' தோன்றிற்று!

ரேடியோ என்னும் ஒலிபரப்பு சாதனம் மேல் நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமாகும். 

இதை ‘ரேடியோ' என்ற பெயரிலேயே வழங்கச் செய்யவேண்டியது நியாயமும் யோக்கியமுமாகும்.

இப்போது பஸ் என்ற சாதனம் பஸ் என்ற பெயராலேயே வழங்கப்படவில்லையா? பென் (Pen) என்ற எழுதும் சாதனம் பேனா என்ற பெயரிலேயே வழங்கி வரவில்லையா? மோட்டார்கார் என்ற சாதனம், ஜீப் - கார் என்ற சாதனம் அதனதன் பெயராலேயே வழங்கி வரவில்லையா? இன்னும் இப்படி எத்தனையோ இருக்கின்றன! அப்படி இருக்க ரேடியோவிற்கு மாத்திரம் 'ஆகாஷ்வாணி' என்ற பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும்?

வயிற்றுப் பிழைப்புக்காகவே மொழி உணர்ச்சி

இதற்குக்காரணம் நம்நாடு அடிமை நாடு ஆதலாலும், நம் மொழி உணர்ச்சிக்காரர்கள் வயிற்றுப் பிழைப்பு உணர்ச்சியாளர்கள் ஆனதாலும் தான்.

நமது மொழி உணர்ச்சியாளர்கள் தங்கள் வயித்துப் பிழைப்புக்கு மாத்திரமே மொழி உணர்ச்சி. அதாவது “திறமை”யைக் காட்டுவதற்கு மாத்திரமே மொழி உணர்ச்சியே அல்லாமல், மற்றப்படி எவன் மனைவி எவனுக்கு ஆனாலும் முல்லாவுக்கு அய்ந்து பணம்" என்பதாக மூன்றாந்தர மொழியில் ஒரு பழமொழி உண்டு. அது போன்றவர்கள் என்ன காரணத்தினாலேயே நம் தமிழ்ப்புலவர்களை நினைத்தால் எனக்கு ஒரு ஆத்திரம் கொண்ட வெறுப்பு ஏற்படுகிறது.

ஆரியம் பரவ-வேரூன்ற நம்புலவர்களே காரணம்

நம் புலவர்களின் வயிற்றுப்பிழைப்பு வாழ்க்கையினாலேயே நம் நாட்டில் ஆரியம் இவ்வளவு தூரம் பரவ, வேரூன்ற முடிந்தது என்பது எனது கருத்து.

- ‘விடுதலை', 12.5.1967


No comments:

Post a Comment