முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஓராண்டுமுழுவதும் கொண்டாடுவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஓராண்டுமுழுவதும் கொண்டாடுவோம்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு முடிவு


சென்னை, மே 22- திமுக சார்பில் மேனாள் முதலமைச்சர் முத் தமிழறிஞர் கலைஞரின் நூற் றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவது என, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்ற உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு ஜூன் 3-ஆம் தேதி, அவரது பிறந்தநாளில் தொடங் குகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 22) இரவு சிங்கப்பூர், ஜப்பான் நாடு களுக்குப் புறப்பட்டுச் செல்கி றார். இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1ஆ-ம் தேதி அவர் தமிழ்நாடு திரும்புவார் எனத் தெரிகிறது. எனவே, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி களை நடத்துவது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவா லயத்தில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நேற்று (21.5.2023) நடைபெற் றது. 

திமுக தலைவரும், தமிழ் நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற இந்தக்கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அய்.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங் கோவன், கே.சி.பழனிசாமி, பொன் .முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர். 

இதில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: 

மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3ஆ-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, வருங்காலத் தலைமுறையினர் அவரை நினைவில் கொள்ளும் வகை யில், எழுச்சியுடன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தீர்மானிக்கப்படுகிறது. ஜூன் 3-ஆம் தேதி மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணித் தலை வர்கள் பங்கேற்கும் நூற் றாண்டு விழா பொதுக் கூட் டம் வடசென்னையில் நடை பெறுகிறது. ஜூன் 20ஆ-ம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை, பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். கவியரங்கம், பட் டிமன்றம், பொதுக் கூட்டம் என அன்றுமுழுவதும் நிகழ்ச்சி கள் நடைபெறும். இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 3-ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை கலைஞன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் திட்டமிட வேண்டும். ஜூன் 3-ஆம் தேதி திமுகவின் அனைத்து அமைப்புகள் சார்பிலும் கலை ஞர் படத்துக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்த வேண்டும். மேலும், ‘ஊர்கள் தோறும் திமுக’என்ற தலைப் பில் நிகழ்ச்சிகளை நடத்தி, பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும். அதே போல, அரசின் அனுமதியுடன் அனைத்து மாவட்டங்களிலும் ‘எங்கெங்கும் கலைஞர்’ என்ற அடிப்படையில், அவரது சிலைகளை நிறுவ வேண்டும். 70 வயதுக்கும்மேற்பட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்ய வேண் டும். மாணவர்கள், இளைஞர் களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும். மாவட்டந் தோறும் திமுகவினரின் குடும் பங்களைச் சேர்ந்த 100 மாண வர்களைத் தேர்வுசெய்து, கல்வி உதவித்தொகை வழங்கலாம். 

அதேபோல, மாவட்டந் தோறும் “என்றென்றும் கலை ஞர்” என்ற தலைப்பில் கருத்த ரங்கம், பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். கணினி, இணைய தள வசதியுடன் கூடிய கலை ஞர் நூற்றாண்டு படிப்பகங் களைத் தொடங்க வேண்டும். திமுகவில் உள்ள அனைத்து அணிகள் சார்பிலும், ஓராண்டு முழுவதும் கலைஞரின் நூற் றாண்டு விழாவைக் கொண் டாடும் செயல்திட்டத்தை உரு வாக்கி, தலைமையின் அனுமதி பெற்று, விமரிசையாக நடத்த வேண்டும்.  இவ்வாறு தீர்மானத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழு நியமனம்

இந்நிலை யில், கலைஞரின் நூற்றாண்டு விழா வைக் கொண்டாட, மாவட்ட நிர்வாகத்துக்கு ஆலோசனை களை வழங்கும் வகையில் திமுக தலைமைக் கழகம் சார் பில் குழு அமைக் கப்படுகிறது. இதில், நாடாளு மன்ற உறுப்பி னர்கள், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தாக திமுக தலைமை அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment