9 ஆண்டு கால பிரதமர் மோடி - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் வளர்ச்சி இப்படித்தானா? வஞ்சிக்கப்படும் வரலாறு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

9 ஆண்டு கால பிரதமர் மோடி - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் வளர்ச்சி இப்படித்தானா? வஞ்சிக்கப்படும் வரலாறு!

ரயில்வே திட்டங்கள் - வஞ்சிக்கப்படும் தென்மாவட்டங்கள்

'தினமலர்' ஒப்புதல் வாக்குமூலப் பட்டியல்

இந்தியாவின் தென்கோடி என்றால் அது குமரிமுனை. தென் கோடியின் தலைநகரம் என்றால் அது மதுரை தான், மதுரையை மய்யமாக வைத்து நான்கு திசைகளிலும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், கேரள எல்லை மாவட்டங்கள் உள்ளன. கலாச்சார ரீதியிலும், வணிக ரீதியிலும், தென் மாவட்டங்கள் மதுரையை மய்யமாக வைத்தே இயங்கு கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் இருந்தும் ரயில்வே துறை மட்டும் மதுரையை புறக்கணித்தே வருகிறது.

மதுரையில் இருந்தும் மதுரை வழியாகயும் தலை நகரம் சென்னைக்கு தினமும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்குகின்றன. ஆனால் எந்த ரயிலிலும் பயணத் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன் கூட முன் பதிவு டிக்கெட் கிடைக்காது. அந்த அளவிற்கு பயணியர் சென்று வருகின்றனர். இருந்தும் கூடுதல் ரயில்கள் விடப்படவில்லை.

கூடுதல் ரயில்கள் தான் இல்லையென்றால் கொஞ்சம் கொஞ்சமாக மதுரையின் முக்கியத்துவமும் குறைக்கப்பட்டு வருகிறது. மதுரை-சென்னை இடையே பகல்நேர ரயில் என்றால் வைகையும், தேஜசும், குருவாயூரும் தான், அதிலும் தாம்பரத்தில் தேஜசை நிறுத்திச் செல்ல முன்வந்த பின்தான் அதற்கு தக்க வரவேற்பு கிடைத்தது.

முன்பு சென்னை-குருவாயூர் ரயிலில் மதுரையில் இருந்து 6 பெட்டிகள் இணைக்கப்பட்டன, அது மதுரை- சென்னை இடையே பகல்நேர ரயிலாக இயங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் பெட்டிகள் இணைப்பதை மதுரைக்கு பதில் தூத்துக்குடிக்கு மாற்றி விட்டனர்.

எனவே இருந்த பகல் நேர ரயிலில் ஒன்று குறைந்து விட்டது. அதே போன்று மதுரையிலிருந்து இயங்கிய பல ரயில்களை பிற பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்து மதுரைக்கான முன்பதிவு எண்ணிக்கையையும் குறைத்து விட்டனர்.

உதாரணமாக மதுரையில் இருந்து திருப்பதி வழியாக ஓகா வரை சென்ற ரயில் ராமேசுவரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அந்த ரயிலில் மதுரைக்கு இருந்தமுன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. இப்படி பல ரயில்கள்.

மீட்டர்கேஜ் பாதை இருந்த போது மதுரையில் இருந்து கொல்லத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, கொல்லம், நாகூர் உட்பட பல ரயில்கள் சென்று வந்தன. அகலப்பாதையாக்கப்பட்ட பின் மீண்டும் அந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. 

மதுரையில் இருந்து கொல்லம் செல்லும் ரயில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது, சிறீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் வழியாக சென்று வந்தது. அகலப்பாதை பணிகள் நடந்தபோது அந்த ரயிலை திருநெல்வேலி, நாகர்கோயில் வழியாக இயக்கினர். 

பணிகள் முடிந்து வேறு பல ரயில்கள் சென்று வந்தாலும் நெல்லை வழித்தடத்தில் தான் அந்த இன்றும் இயங்குகிறது.

சிறீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழித்தடத்தில் மதுரை யில் கொல்லம், புனலூர் வழியாக கேரளாவிற்கு ரயில் இயக்க வாய்ப்பிருந்தும் இயக்குவதில்லை.

தேவை மற்றொரு முனையம்.... 

அண்டை மாநிலங்களான கோளா, கருநாடகா இரண்டி லும் தலைநகருக்கு இணையாக மற்றொரு ரயில் முனையம் உள்ளது. கேரளத்தின் திருவனந்தபுரத்தை ஒட்டி கொச்சு வேலியும், பெங்களூருக்கு யஷ்வந்த்த்பூர் என ரயில் முனை யங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு அப்படி எதுவுமே இல்லை. தாம்பரத்தையும் பெரம்பூரையும் புதிய முனையமாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

முன்பதிவு பெட்டிகளை இணைக்கலாமே 

மதுரையில் இருந்து தஞ்சாவூர் கும்பகோணம் பகுதி களுக்கு செல்ல செந்தூர் ரயில் மட்டுமே முன்பதிவு ரயிலாக உள்ளது. அதிலும் முன்பதிவு கிடைக்காது. ஆனால் முன்பதி வில்லாத திருநெல்வேலி-தாம்பரம் அந்தியோதயா ரயில் அந்த வழியாகத்தான் செல்கிறது. அதில் 3 பெட்டிகளை முன்பதிவு பெட்டிகளாக மாற்றினால் குடும்பத்துடன் செல்ப வர்களுக்கு வசதியாக இருக்கும். 

சென்னையில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிறீவில்லி புத்தூர் ராஜபாளையம் தென்காசி வழியாசு செங்கோட் டைக்கும்,

சென்னையிலிருந்து விழுப்புரம்,திருச்சி,புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை பரமக்குடி,. ராமநாத புரம் வழியாக ராமேஸ்வரத்திற்கும், 

சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், பழனி. உடுமலைப்பேட்டை வழியாக பொள்ளாச்சிக்கும், அந்தியோதயா ரயில்கள் இயக்கினால் பல லட்சம் ஏழைத் தொழிலாளர்கள். பயனடைவார்கள்.

தூரம் அதிகரிப்பு... பெட்டி குறைப்பு

திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக மயிலாடு துறை - ஈரோடுக்கு ஒரு பாசஞ்சர் சென்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு சில பெட்டிகள் மயிலாடுதுறைக்கும் மற்ற பெட்டிகள் ஈரோடுக்கும் செல்லும்.

அதே போன்று மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில் சென்று வந்தது. அதில் 16 பெட்டிகள் இருந்தன. 

இந்த இரண்டு ரயில்களையும் ஒன்றாக்கி செங்கோட்டை யில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரே ரயிலாக சில மாதங் களுக்கு முன் மாற்றினர். ஆனால் 16 பெட்டிகள் இருந்த அந்த ரயில் 12 பெட்டிகளாக குறைக்கப்பட்டு விட்டது. செங்கோட்டையில் இருந்தே கூட்டமாக வரும் அந்த ரயிலில் மதுரையில் ஏறுவதற்கே இடம் கிடைப்பதில்லை.

நெல்லை - திருச்செந்தூர் 

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் 4 முறை, செங்கோட்டைக்கு தினமும் 4 முறை பாசஞ்சர் ரயில்கள் சென்று வருகின்றன. ஆனால் மதுரையில் இருந்து பழனிக்கு ஒரு முறை கூட பாசஞ்சர் ரயில் கிடையாது. திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் மட்டும் தான் உள்ளது. 

திருமங்கலத்தை மேம்படுத்தலாம்

கடந்த 20 ஆண்டுகளாக ரயில்வே தரப்பில் மதுரை-சென்னை பாதையில் ஒற்றை ரயில் பாதைதான் உள்ளது. ஏற்கெனவே 150 சதவீத போக்குவரத்து உள்ளது. 

இரட்டை ரயில்பாதை பணிகளும், மின்மய பணிகளும் முடிந்தபின் கூடுதல் ரயில் இயக்கலாம் என்று கூறி வந்தனர். தற்போது அவை அனைத்துமே முடிந்து விட்டன. 

தற்போதுள்ள ஒரே பிரச்சினை காலிப்பெட்டிகளை நிறுத்த மதுரை ரயில் நிலையத்தில் இடம் இல்லை என்பது தான், அதற்கு மாற்றாக கூடல் நகரிலும், திருமங்கலத்திலும் ரயில்வேக்கு சொந்தமாக ஏராளமான இடம் உள்ளது. எனவே காலிப்பெட்டிகளை நிறுத்துவதுடன் கூடுதல் முனையமாக திருமங்கலத்தை பயன்படுத்தலாம்.

கேரளா லாபி

ரயில்வே துறையில் கேரளாவின் லாபி வலுவானது, பல உயர் அதிகாரிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மேலும் கட்சி வேறுபாடின்றி கேரள எம்.பி,க்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள். அதற்கு ஒரு உதாரணமாக திருநெல்வேலி பிளாஸ்பூர் ரயிலை சொல்லலாம். 

கடந்த ஆட்சியில் அந்த ரயில் அறிவித்தபோது தமிழ் நாட்டில் இருந்து பிலாஸ்பூர் என அறிவித்தனர். ஆனால் அந்த ரயில் திருநெல்வேலியில் புறப்பட்டு நாகர்கோவில் வழியாக கேரளா முழுதும் பயணித்து பாலக்காடு வழியாக கோவை வந்து ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக பிலாஸ்பூர் செல்கிறது. தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட ரயில் என்றால் திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக அல்லவா ஈரோடு செல்ல வேண்டும்.

செங்கோட்டையிலிருந்து கொல்லம் அகல ரயில் பாதை ஆக்கப்பட்ட பின் தற்போது கொல்லத்தில் இருந்து புனலூருக்கு 9 ரயில்கள் இயங்குகின்றன. அதே கொல்லத்தில் இருந்து செங்கொட்டைக்கு 3 ரயில்கள் மட்டுமே இயங்கு கின்றன.

மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது திருநெல்வேலி-கொல்லம் வழித்தடத்தில் தினமும் 4 ரயில்கள் இயங்கின. தற்போது திருநெல்வேலி-பாலக்காடு ஒரு ரயில் மட்டுமே இயங்குகிறது. இதுவெல்லாம் கேரள லாபியின் சாதனை.

புதிய பாதை இல்லை

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட ரயில் பாதை களில் இரட்டை ரயில் பாதை, மின்மயமாக்கல் போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதே தவிர புதிய ரயில் பாதை திட்டங்கள் எதுவும் பல ஆண்டுகளாக நடக்கவில்லை.

தற்போது தென் மாவட்டங்களுக்கு முதல் முறையாக மதுரை - தூத்துக்குடி ரயில் பாதைக்கான பணிகள் நடக் கின்றன. 

அதே போல் மண்டபம்-ராமேஸ்வரம் பாம்பன் பாலத் திற்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணிகள் முழு வீச்சில் தமிழ்நாட்டிற்கு நடந்து வருகின்றன. இதை தவிர திண்டுக்கல் - சபரிமலை உள்ளிட்ட பல புதிய ரயில் பாதை பணிகள் ஆய்வு நிலையிலேயே பல ஆண்டுகளாக உள்ளன.

இரவு ரயிலே கிடையாது

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல இரவு 9.40க்கு புறப்படும் பாண்டியன் தான் கடைசி ரயில். (இரவு 11.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து அந்தியோதயா புறப்படுகிறது. ஆனால் அது முன்பதிவற்ற, படுக்கை வசதி இல்லாத ரயில், 

ஆனால் திருச்சிக்கு அதன் பின் மங்களுரு எக்ஸ்பிரஸ் 'ராக்போர்ட் என இரு ரயில்கள் உள்ளன.

ராக்போர்ட் காலை 4.55க்கு திருச்சி வருகிறது. இரவு 10.50க்கு தான் புறப்படுகிறது. அந்த ரயிலை மதுரைக்கு நீட்டிப்புசெய்தால் பெரும் பயனளிக்கும்.

வருமா ‘வந்தே பாரத்’

சில மாதங்களுக்கு முன் மதுரை ரயில் நிலையத்தில் முழு வேகத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வந்தே பாரத் ரயில் இயக்குவதற்காகத்தான் இது என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து பல நாள்கள் ஆகியும் வந்தே பாரத் குறித்து சத்தமே இல்லை.

இணைப்பு ரயில்கள் ஏன் இல்லை?

முன்பு ஏராளமான இணைப்பு ரயில்கள் இயக்கப்பட்டன..

உதாரணம் நெல்லை-மயிலாடுதுறை -ஈரோடு ரயில்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு ரயில் ஈரோடிற்கும், ஒரு ரயில் மயிலாடுதுறைக்கும் செல்லும்.

தற்போது ஈரோடு செல்லும் ரயில் நிறுத்தப்பட்டு,

மயிலாடுதுறை ரயில் செங்கோட்டை ரயிலுடன்

இணைக்கப்பட்டு செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலாக செல்கிறது. இணைப்பு ரயில்களாக சில ரயில்களை இயக்கலாம். 

காரைக்காலில் இருந்து வரை எர்ணாகுளம் வரை செல்லும் தினசரி ரயில் இரவு 8.30 மணிக்கு திருச்சி வருகிறது. அந்த ரயிலில் இணைக்கும் விதத்தில் மதுரையில் இருந்து சில பெட்டிகளுடன் ரயில் இயக்கினால் மதுரை-திருச்சி- கோவைக்கு மாலை நேர ரயில் கிடைக்கும்.

மேலும் எர்ணாகுளம் பகுதியில் இருந்து மதுரைக்கு வர அமிர்தாவை தவிர மற்றொரு ரயில் கிடைக்கும்.

அதே போன்று கேரளாவில் இருந்து விஜயவாடா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்கள் கோவை வழியாக செல்கின்றன. மதுரையில் இருந்து அந்த ரயில்களில் இணைக்கும் வகையில் பழனி வழியாக கோவைக்கு குறைந்த பெட்டி ரயில்களை இணைக்கலாம். 

கிழக்கே 12 - மேற்கே 1

மானாமதுரையில் இருந்து கிழக்கு பகுதியான ராமேஸ்வரம் வழித்தடத்தில் 6 தினசரி ரயில்கள் உட்பட 12 ரயில்கள் இயங்கி வருகின்றன.

ஆனால், மானாமதுரையில் இருந்து மேற்கு பகுதியான விருதுநகர் வரை அகல ரயில் பாதை உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் தினசரி ரயில் ஒன்று கூட கிடையாது;

விருதுநகர் - காரைக்குடி ரயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயங்குகிறது.

எனவே, மானாமதுரை-விருதுநகர் வழித் தடத்தில் தினசரி குறைந்தபட்சம் நான்கு முறை சென்று வரும் வகையில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

தமிழக ரயில்கள் தமிழ்நாட்டிற்கா?

தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்படும் ரயில்களில் பெரும் பாலானவை சென்னையில் இருந்து புறப்பட்டு வட மாநிலங்களுக்கு செல்லும். 

சென்னை என்பது தமிழ்நாட்டின் வடக்கு மூலை, அங்கிருந்து ரயில்கள் இயக்கினால் பயன்பெறுவது ஆந்திரா, கருநாடகா போன்றவைதான். 

சென்னை சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் தவிர தமிழக மக்களுக்கு எந்த பலனும், கிடையாது. அதுவே கேரளத்திற்கு ரயில்கள் என்றால் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும். முழு கேரளமும் பயணிக்கும். இனி தமிழ்நாட்டிற்கு ரயில்கள் என்றால் அதை நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து புறப்படச் செய்ய வேண்டும். அப்படியானால் அது தமிழகத்திற்காள ரயிலாக இருக்கும்.

மக்களின் தேவை என்ன?

மதுரையை மய்யமாக வைத்து திருவனத்தபுரம், விழுப்புரம், மேட்டுப்பாளையம், பெங்களுரு, புதுச்சேரி, வேலூர் போன்ற நகரங்களுக்கு ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கலாம். 

மதுரையில் காலை 6.00 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், செங்கோட்டை, கொல்லம் வழியாக திருவனந்தபுரம் மதியம் 2.00 மணிக்கு சென்றடைந்து, மதியம் 3 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதே வழித் தடத்தில் இரவு 11:00 மணிக்குள் மதுரை திரும்பும் வகையில் ஒரு இன்டர்சிட்டி ரயில் இயக்கலாம். 

மதுரையில் இருந்து காலை 4.00 மணிக்கு புறப்பட்டு காலை 11.15க்கு விழுப்புரம் செல்லும் ரயிலை புதுச்சேரி வரை நீட்டிப்பு செய்யலாம். தற்போது விழுப்புரத்தில் இருந்து அந்த ரயில் மாலை 4.35க்கு புறப்படுகிறது. புதுச்சேரி சென்று வந்தாலும் அதே நேரத்தில் புறப்படலாம். மதுரை - புதுச்சேரிக்கு ரயில் வசதி கிடைக்கும். 

மதுரையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஒசூர் வழியாக பெங்களூரு சென்று திரும்பும் வகையில் ஒரு இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும்.

மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, திருச்சி. தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக விழுப்புரத்திற்கு ரயில்கள் இயக்கலாம். 

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி, கோவை வரை இயங்கும் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கலாம்.

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்ல ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளது. வார விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில் பெரும் கூட்டம் கூடுகிறது. எனவே ராமேஸ்வரம், தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து கோவைக்கு பகல்நேர பாசஞ்சர் ரயில், இரவு நேர எக்ஸ்பிரஸ் இயக்கலாம். 

செங்கோட்டை திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களுருக்கு எக்ஸ்பிரஸ் இயக்கலாம்.

- நன்றி: ‘தினமலர்', 28.5.2023


No comments:

Post a Comment