பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி, மே 3- குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வின் போது, கர்ப்பி ணியான பில்கிஸ் பானு 11 பேர் கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அந்த கும்பல் 14 பேரை எரித்து கொன்றது. 

இந்த வழக்கில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு கருணை அடிப்படையில் கடந் தாண்டு விடுவித்தது. இதனை எதிர்த்து பில் கிஸ் பானு உச்சநீதிமன் றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப், பிவி. நாகரத்னா அமர் வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய மற்றும் குஜராத் அரசு களின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் பானோ வைத் தவிர தாக்கல் செய்யப்பட்ட வேறு மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தார். பின்னர், பாதிக் கப்பட்டோர் தரப்பில் பானுவின் மனுவுக்கு பதில் அளிக்க கால அவ காசம் வேண்டும்,” என்று வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment