நாடாளுமன்றம் கட்டட திறப்பு - ஒரு சின்ன கணக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட ஆன செலவு கிட்டத்தட்ட ரூ.850 கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

நாடாளுமன்றம் கட்டட திறப்பு - ஒரு சின்ன கணக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட ஆன செலவு கிட்டத்தட்ட ரூ.850 கோடி

சமீபத்திய பட்ஜெட்டின் படி, இந்தியாவின் ஓராண்டு செலவு 45 லட்சம் கோடி.  இந்த ஒப்பீடு எதுக்குன்னா, இந்திய ஒன்றிய அரசு செய்யும் செலவுகளோடு ஒப்பிடுகையில் (அதாவது திட்டங்களில்) புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஒரு மிகச்சிறிய Project. One Time Project. Simple Project. 

இது ஒரு சாதாரணமான நிர்வாகச் செலவு.   அரசின் கொள்கையை வெளிப்படுத்தும் திட்டமல்ல. மக்களின் நீண்டநாள் பிரச்சி னைக்குத் தீர்வு காணும் திட்டமும் அல்ல. புதிய அறிவியல் கண்டுபிடிப்பும் அல்ல. கடினமான சிக்கல் நிறைந்த பணிகளைக் கொண்ட திட்டமும் அல்ல. 

ஒரு Project Plan «ð£†´, Tender விட்டு, ஒரு Construction company கிட்ட வேலையைக் கொடுத்தால் போதும். சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அவ்வளவு தான் இந்தக் கட்டட வேலை.

கட்டட வேலை இவ்வளவு எளிதாக இருக்குமெனில், கட்டடத்தை திறப்பது எப்படி இருக்க வேண்டும்?

ஒரு 10-15 நிமிடங்களில் முடிந்துவிடக் கூடிய திறப்பு விழா. எப்ப திறக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஒரு கல் வெட்டு. இந்த நிகழ்ச்சி குறித்த அரசு சார்பில் ஒரு பிரஸ் ரிலீஸ். அவ்வளவு தான். 

ஆனால் நடந்தது என்ன? 

திறப்பு நாள் முழுவதும் ஊடகங்களில் கூப்பாடு. இதற்காக பல நாள்கள் தயாரிப்பு. ஆஹா ஓகோ என பலர் பெருமைக்கு மாவு இடித்தனர். 

இந்தக் கட்டடம் ஜனநாயகத்தை வலுப் படுத்தும் என பீத்தல் வேறு. 

செங்கோல்னு சொல்லி ஒரு தங்க கம்பியை காட்டி, அதுக்கு ஏகப்பட்ட சீன். இந்த செங்கோல் தந்த வள்ளலுக்கு தனி விமானம். பாரம்பரியம், கலாச்சாரம் ன்னு கதை கதையாய் அளந்து விட்டானுக.  என்னென்னமோ செஞ்சாங்க. 

ஏன் இந்த பெருமை பீத்தல்?

ஏன் இந்த வெட்டி வேலை ?

யோசிச்சுப் பார்த்தால் ஒன்னே ஒன்னு தான் விளங்குது.

பிரதமராக செய்ய நாட்டில் ஏகப்பட்ட காரியம் உண்டு. அதை எதையும் செய்யாமல் இருப்பவரால் என்ன பேச முடியும்?

இந்த மாதிரி வெட்டிப்பெருமை தான் பேச முடியும்.

காரியம் இருக்கிறவன் ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்பான்.

வேலை வெட்டி இல்லாதவன், வெட்டி வேலை பார்ப்பான்.  அவ்ளோ தான். Simple.

- இணையத்திலிருந்து....

No comments:

Post a Comment