7.9 லட்சம் இந்தியர்களிடம் தலா ரூ.8.2 கோடி சொத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

7.9 லட்சம் இந்தியர்களிடம் தலா ரூ.8.2 கோடி சொத்து

 புதுடில்லி, மே 19  லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் பிராங்க் நிறுவனம், உலகளாவிய பெரும் பணக்காரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714 ஆக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 30 மில்லியன் டாலருக்கு (ரூ.25 கோடி) மேல் சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12,069 ஆக உள்ளது. 2027-ல் இது 19,119 ஆக உயரும். அதேபோல், 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 161 ஆக உள்ளது. 

இது அடுத்த 5 ஆண்டுகளில் 195 ஆக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சிசிர்பைஜால் கூறுகையில், “ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்” என்றார்.

No comments:

Post a Comment