ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல்

சென்னை, மே 31 - டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.

அமைச்சர் க.பொன் முடி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதவது: - 

அரசு கலைக் கல்லூரி களில் சேருவதற்கு நிறைய விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக அரசுப் பள்ளி களில் படித்த மானவிக ளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த தால் மகளிர் சேர்க்கை கல்லூரியில் அதிகரித்து உள்ளது.

உயர் கல்வியை பொருத்த வரை அரசு கலை அறிவி யல் கல்லூரியில் நிறைய மாணவர்கள் படிப்பதற் கான வாய்ப்புகள் கொடுக் கப்பட்டுள்ளன. உயர் கல்வித்துறை பொற்கால மாக மாற வேண்டும் என்ற முதலமைச்சரின் திட்டத்தின் அடிப்படை யில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு கலை கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற் காக விண்ணப்பிப்பவர்க ளின் எண்ணிக்கை 15 சத விகிதம் அதிகரித்துள் ளது.

டி.ஆர்.பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர் களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத் தில் வழக்குகள் கொஞ்சம் நிலுவையில் இருப்ப தால் தாமதம் ஆகியுள் ளது. ஜூன் முதல் வாரத் தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிடும். வந்த பிறகு 4 ஆயிரம் பேர் கல்லூரி களில் எல்லா பேராசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment