சென்னையில் 3 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

சென்னையில் 3 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது


சென்னை, மே 27-
கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படவுள்ள பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணி, வகுப்பறைகள் பராமரிப்பு, சேத மடைந்த மேஜைகள் சரி பார்ப்பு ஆகியவை தீவிரமாக நடந்து முடிந் துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத் தும் வகையில் குடிநீர் தொட்டி, கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 80 அரசுப் பள்ளி களும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 

3 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பாடப் புத்த கங்கள் வழங்கும் பணி சிந்தாதிரிப் பேட்டை, வேளச்சேரி, திருவல்லிக் கேணி பகுதிகளில் நடந்து வரு கிறது.

அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கு சென்று தங்கள் பள்ளிக ளுக்கு தேவையான பாடப் புத்தகங் களை பெற்றுச் செல்கின்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாண வர் சேர்க்கை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளிகள் டி.பி.அய். வளாகத்தில் உள்ள குடோனில் பெற்றுச் செல்கின்றன.

No comments:

Post a Comment