வரலாற்றில் நேற்று (மே 27) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

வரலாற்றில் நேற்று (மே 27)

1) 27-05-1761 - இந்தியாவில் முதன் முதலாக ரயாட்வாரி, நிலவரி முறையை (Ryotwari)  அறிமுகம் செய்த சென்னை மாகாண மக்களால் “முன்ரோல்ப்பா” என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாண கவர்னர்  மேஜர் ஜெனரல் சர் தாமஸ், முன்ரோ அவர்களின் பிறந்த நாள்.

2) 27-05-1777 - புயலின் வேகம், அதன் தாக்கம் மற்றும் அதன் விளைவுகளை அறிந்து கொள்ள முதன் முதலாக காற்று வீச்சின் வலிமையை வகைப்படுத்தும் அளவு கோலான Beaufort wind force scale எனப்படும் ‹ Beaufort scale-லை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ் பெற்ற நீராய்வியல் (Hydrography) விஞ்ஞானியும், பிரிட் டிஷ் கடற்படை அதிகாரியுமான சர் பிரான்சிஸ் பியூபோர்ட் அவர்களின் பிறந்த நாள்.

3) 27-05-1910 - காசநோயை (Tuberculosis)உருவாக்கும் கிருமியைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய அறிவியலாளர், மருத்துவர் ராபர்ட் கோச் அவர்களின் நினைவு நாள்.

4) 27-05-1914 - மின்சார பல்பை அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டு பிடிப்பதற்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் 1878இல் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் சர் ஜோசப் வில்சன் சுவான் அவர்களின் நினைவு நாள்.

(கூடுதல் தகவல்:- 1978இல் இங்கிலந்து Newcastle Chemical Society இல் தான் கண்டுபிடித்த மின்சார பல்பின் தன்மையைப்பற்றி விவரித்தார். இவர் கண்டு பிடித்தபின் காப்புரிமம் பெறாமல் உற்பத்தி செய்து வந்தார், முதன்முறையாக இங்கிலாந்து London இல் 1881இல் திறக்கப்பட்ட புகழ்பெற்ற நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அரங்கமான Savoy Theatre இல் மின் விளக்குகளை அமைத்துக் கொடுத்தார். தாமஸ் ஆலவா எடிசன் உலகில் முதன்முதலாக காப்புரிமம் பெற்றதால் உலகப் புகழ் பெற்றார். கி.பி. 1761 முதல் மின் விளக்குகள் உபயோகத்தில் உள்ளன, குமிழ் விளக்குகளாக (பல்ப்) மாறியது இவர்களின் கண்டுபிடிப்பிற்கு பின்னரே.

5) 27-05-1919 - தெலுங்கு மொழியின் முதல் நாவலான “ராஜசேகரா சரித்ரா” வை எழுதியவரும், தெலுங்கு இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த இலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும், பெண் கல்வி, விதவைத் திருமணங்களுக்காக போராடியவரும், வரதட் சணை ஒழிப்புக்காக போராடியவருமான “ராவ் பகதூர்” கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு அவர்களின் நினைவு நாள்.

6) 27-05-1935 - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் ரமாபாய் அம்மையார் அவர்களின் நினைவு நாள்.

7) 27-05-1953 - தமிழகமெங்கும் பிள்ளையார் பொம்மை உடைப்புக் கிளர்ச்சி நடைபெற்ற நாள்.

8) 27-05-1964 - மேனாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவு நாள்.

9) 27-05-1964 - தற்காலிக பிரதமராக குல்சாரி லால் நந்தா அவர்கள் பதவி ஏற்ற நாள்.

No comments:

Post a Comment