உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்: யு.ஜி.சி. அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்: யு.ஜி.சி. அனுமதி

சென்னை, மே 4 - உயர்கல்வி நிறுவனங் களில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட யு.ஜி.சி அனுமதி வழங்கி யுள்ளது. 

இதுதொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 

பல்கலைக்கழக மானியக் குழுவால் இதுவரையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் கீழ்க்கண்ட திட் டங்கள் அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ‘ஸ்வயம்’ திறந்த நிலை ஆன்லைன் படிப்புகள், மின் உள்ளடக்க மேம்பாட்டு திட்டம், சமூகக் கொள்கை ஆய்வுக்காக பல்கலைக்கழகங்களில் மய்யங்களை நிறுவுதல், உயர்கல்வி நிறுவனங்களின் பெண்கள் படிப்புக் கான திட்டம், கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சித் திட் டங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டம், ஆசிரி யர்களுக்கான பல்கலைக்கழக மானி யக்குழு ஆராய்ச்சி விருதுகள், தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்பு திட்டம் உள்பட 23 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment