ஜூன் 15இல் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

ஜூன் 15இல் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்

சென்னை, மே 31 - சென்னை கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள் ளது. இந்த மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டுள்ளது.

இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை, ரத்தநாள அறுவைச் சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறு வைச் சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.

இதனிடையே கடந்த மாதம் டில்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத தலைவர் மாளிகையில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை கிண்டி, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை கொடுத் தார். முதலமைச்சரின் அழைப்பை ஏற்ற திரவுபதி முர்மு வருகிற ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு வருவதாகவும் அன்றைய தினமே கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கரீபியன் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் சென்னை வருகை திடீரென ரத்தானது. 

இந்நிலையில் சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டுக்கு வருகை புரிவார் என தகவல் வெளி யாகியுள்ளது. ஜூன் அய்ந்தாம் தேதிக்கு பதில் ஜூன் 15ஆம் தேதி அன்று மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment