ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு ஏன் முதலமைச்சர் twitter பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு ஏன் முதலமைச்சர் twitter பதிவு


சென்னை, ஏப்.20 கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவை யில் அரசினர் தனி தீர் மானத்தை முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் முன்மொழிந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மதம் மாறி னாலும் ஜாதி மாறுவது இல்லை. ஜாதிய இழிவுகள் ஒழிவது இல்லை. அரசமைப்பு திருத்தம் வேண்டி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஜாதியின் பெயரால் மறுக் கப்பட்ட உரிமைகளை, ஜாதியின் பெயரால் கொடுப்பதே சரி’ என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment