முடியாது - முடியாது "உயிரைக் கூடக் கொடுப்பேன் குடிமக்கள் பதிவேட்டை அனுமதியேன்!" - மம்தா உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

முடியாது - முடியாது "உயிரைக் கூடக் கொடுப்பேன் குடிமக்கள் பதிவேட்டை அனுமதியேன்!" - மம்தா உறுதி

கொல்கத்தா, ஏப். 23  "வெறுப்பு அரசியலைக் கடைப்பிடிப்பதன் மூலமாக சிலர் நாட்டை பிளவு படுத்த முயல்கின்றனர். நான் எனது உயிரைக் கூட விடுவேன், ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட் டேன்" என்று மம்தா  தெரிவித்துள்ளார்.

22.4.2023 அன்று கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில்  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  கலந்து கொண்டார். அப்போது அவர்  கூறியதாவது: "வங்கத்தில் நாம் அமைதியை விரும்பு கிறோம். நமக்கு கலவரங்கள் தேவையில்லை; அமைதியே வேண்டும். சிலர் வெறுப்பு அரசியல் நடத்துவதன் மூலமாக நாட்டை பிளவுபடுத்த விரும்பு கின்றனர். நான் என் உயிரையும் தரத்தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்க மாட் டேன். பணபலம் மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக நான் போராடத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு போதும் அவர்களுக்கு அடிபணிய மாட்டேன்.யாரோ ஒருவர் பாஜகவிடம் பணம் பெற் றுக்கொண்டு மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்குகளை பிரிப்ப தாக கூறுகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லுகிறேன். பாஜகவுக்காக யாராலும் முஸ்லிம் வாக்குகளை பிரிக்க முடியாது.

இன்னும் ஓராண்டில் அடுத்து  நாட்டில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானிப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். வரும் தேர்தலில் அந்தப் பிரிவினை சக்திகளுக்கு எதிராக வாக்களிப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்றத் தவறினால் நாம் உறுதியாக அனைத்தையும் இழந்துவிடு வோம்." இவ்வாறு அவர் பேசினார்.

யாருடைய பெயரையும் நேர டியாக குறிப்பிடாமல் பேசிய மேற்குவங்க முதலமைச்சர், தனது பேச்சில் பாஜக மற்றும் அசாசுதீன் ஓவைசியின் ஏஅய் எம்அய்எம் கட்சியைக் கடுமை யாக சாடினார். பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அசாசுதீன் ஓவைசி முஸ்லீம் வாக்குகளைப் பிரிப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் அவர், ஓவைசியை அய்தராபாத்திலிருந்து வந்திருக்கும் பாஜக நண்பர் என்று சாடினார்.


No comments:

Post a Comment