கருவாக்குறிச்சி தங்க.பிச்சைக்கண்ணு இல்ல மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

கருவாக்குறிச்சி தங்க.பிச்சைக்கண்ணு இல்ல மணவிழா


நீடாமங்கலம், ஏப். 5- மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கருவாக் குறிச்சி தங்க பிச்சைக்கண்ணு - பிச்சையம்மாள் ஆகியோரின் மகள் அன்பரசிக்கும், நீடாமங் கலம் வட்டம் எடமேலையூர் பாலன் - சீத்தாலெட்சுமி ஆகியோரின் மகன் கார்த்திக்கும் 24-.3.2023 அன்று காலை 10 மணியளவில் காவ ராப்பட்டு கி.வி.ஸி.ரி திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.கணேசன், மாவட்ட துணைத்தலைவர் ந.இன்பக்கடல், மாவட்ட அமைப்பளர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புஸ்பநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மணமக்கள் உறுதிமொழி ஏற்கச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் வாழ்த்துரையாற்றினார்.

கருவாக்குறிச்சி பஞ்சு. கோபாலகிருஷ்ணன் அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். நல்லிக் கோட்டை கழக தலைவர் என்.நல்லத்தம்பி நன்றி கூறினார்.

தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, கழக பேச்சாளர் இராம.அன்பழகன், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, பகுத்தறிவு ஆசிரியரணி மண் டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட ப.க தலைவர் வை.கௌதமன், பகுத் தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் த. வீரமணி, தஞ்சை மாவட்ட இளைஞரணி தலை வர் ரெ.சுப்ரமணியன், மன்னை ஒன்றிய தலைவர் மு. தமிழ் செல்வன், உரத்தநாடு ஒன்றி யத்தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல் பரமசிவம், காவராப்பட்டு தர்மராசன், வன்னிப்பட்டு செந்தில், தஞ்சை மாவட்ட இணைச்செயலாளர் வடசேரி ஞானசிகாமணி,மன்னை சித்து, வணங்காமுடி கருவாக் குறிச்சி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் முத்துராம கிருஷ்ணன், தங்க மனோகரன், நீடாமங்கலம் ஒன்றிய செய லாளர் அய்யப்பன், பொறி யாளர் அறிவுமணி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment