கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனைக் கடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனைக் கடன்

 அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை, ஏப்.  8- வீட்டு மனை வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார். 

தமிழ்நாடு சட்டமன்றத் தில் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 6.4.2023 அன்று நடைபெற்றது. இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துறையின் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர், கூட்டுறவுத்துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:- கூட்டுறவு வங்கிகளின் மூலம் வீட்டுமனை வாங்க கடன் உதவி வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் நாட்டுப்புற கலைஞர் கள், பாரம்பரிய இசைக்கருவி மற்றும் பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிக்கும். பணியில் உள்ளவர் களுக்கு சிறப்பு கடன் உதவி வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் மூத்த குடிமக்களுக்கு மறு அட மானக் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் உறுப்பினரின் வயது உச்சவரம்பு 60இல் இருந்து 70 ஆக உயர்த்தப்படும்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் சென்னை கொருக்குப்பேட்டை, அம்பத் தூர், குன்றத்தூர், தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 5 இடங்களில் தொடங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு தாம்பரம் கிழக்கு மற்றும் சைதாப்பேட்டை பகுதி களில் 2 புதிய கிளைகள் தொடங்கப்படும். 

கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,500 நியாயவிலைக் கடைகள் பொலிவூட்டப்படும். கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 5 ஆயிரம் நியாய விலைக் கடைகளை மேம்படுத்தி அய்.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்படும். திருவள்ளூர் மாவட்டம் திரூரில் ஒரு கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கப்படும். 

மேற்கண்டவாறு அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டார்.

No comments:

Post a Comment