சென்னை அய்அய்டியில் மாணவர்கள் தற்கொலை விவகாரம் மேனாள் காவல்துறை இயக்குநர் திலகவதி தலைமையில் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

சென்னை அய்அய்டியில் மாணவர்கள் தற்கொலை விவகாரம் மேனாள் காவல்துறை இயக்குநர் திலகவதி தலைமையில் விசாரணை

சென்னை,ஏப்.26- மாணவர்கள் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் திலகவதி தலைமையில் சென்னை அய்அய்டி குழுஅமைத்துள்ளது.

சென்னை அய்அய்டியில் கரோனா பரவலுக்கு பிறகு மாணவர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 பேர் தற் கொலை செய்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை அய்அய்டியில் பிஎச்டி படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின் குமார் ஜெயின் கடந்த மார்ச் 31ஆம் தேதி வேளச் சேரியில் அவர் தங்கியிருந்த வீட் டில் தற்கொலை செய்து கொண் டார்.

இந்த மாணவரின் தற்கொ லைக்கு அவரது வழிகாட்டியான பேராசிரியருக்கும் நேரடி தொடர் உள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதவிர, தொடர் தற்கொலை சம்பவங்களுக்கு அய்.அய்.டி.நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் கள் அய்அய்டி வளாகத்தில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் அய்அய்டி இயக்குநர் வி.காமகோடி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று மாணவர்கள் தற்கொலை குறித்து விசாரணை நடத்து வதற்கு பிரத்யேகக் குழு அமைக்க அய்அய்டி நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

அதன்படி ஓய்வுபெற்ற அய்.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சென்னை அய்.அய்.டி. தற்போது அமைத் துள்ளது.அதில் ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள் டி.சபிதா, கண்ணகி பாக்கியநாதன், அய்.அய்.டி. பேரா சிரியர் ரவீந்திர கீத்து மற்றும் ஆராய்ச்சி மாணவர் அமல் மனோ கரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவிடம் தற்கொலை சம்பவம் தொடர்பாக தங்களின் புகார்களை மாணவர்கள் தெரிவிக் கலாம் எனவும் அய்அய்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தக வல்கள் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment