மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி கொண்டாட்ட இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி கொண்டாட்ட இயக்கம்

சென்னை, ஏப். 17- தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி களில் இன்று 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின் றனர். 2022-_2023 கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் வருகிற 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளி களிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் ’அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக் கான விழிப்புணர்வு பேரணி இன்று (17.4.2023) முதல் 28ஆம் தேதி வரை பதாகைகள், துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. 

இதனிடையே, ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள் ளலாம் என தெரிவிக்கப் பட் டுள்ளது.

No comments:

Post a Comment