தேசியக் கட்சி தகுதியை பறிப்பதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

தேசியக் கட்சி தகுதியை பறிப்பதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

புதுடில்லி, ஏப். 12- திரிணாமுல் காங் கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்னிஸ்டு கட்சி ஆகிய 3 கட்சிகளின் தேசியக் கட்சி தகுதியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.தேசியக்கட்சி தகுதி பறிக்கப்பட்டிருப்பதற்கு இந் திய கம்யூனிஸ்டு கட்சி வேதனை தெரிவித்துள்ளது. 

இதுபற்றி அந்தக் கட்சி சார்பில்  நேற்று (11.4.2023) வெளியிடப் பட்டுள்ள தகவலில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:-

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செழுமையான வரலாற்றை, ஆங்கி லேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் செய்த முக்கிய பங்களிப்பை, சுதந்திரத்துக்கு பின்னர் தேசிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் வகித்த பங்கை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்திருக்க வேண்டும். நாட்டின் ஜனநாயக அரசியலை வலுப்படுத் துவதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் உள்ளது. நாட் டுக்கும், மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கும் இந்திய கம் யூனிஸ்டு கட்சி தன் அர்ப்பணிப்பு மிக்க சேவையைத் தொடரும். அதே நேரத்தில் தேர்தல் சீர்திருத் தங்களுக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது பிரசாரத்தை தீவிரப் படுத்தும் என்று கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment