ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 19.4.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* ஜாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதிப் போரில் முதல் மைல்கல் என்கிறது தலையங்க செய்தி.

* கருநாடக மாநில பாஜகவின் உட்கட்சி பூசல் காரணமாக வட மாநிலங்களைப் போல் இங்கு ஹிந்துத்வா திட்டத்திற்கு வரவேற்பு இல்லை என்கிறார் எழுத்தாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.

* பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தொழில் நுட்பம் இல்லாத பணிகளுக்கான தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் இவற்றுடன் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் நடத்தப் படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* மாநில அரசின் முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ஜாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்க கோரிக்கைகள், 2024இல் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய ஆயுதமாக விளங்கும்.

* பில்கிஸ் பானு வழக்கு குறித்து நீதிபதிகள் கூறுகையில், ஒரு கர்ப்பிணி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கையும் பிற வழக்கையும் ஒப்பிட முடியாது. கூட்டு வன்கொடுமை, படுகொலையை ஒற்றை கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றவாளிகளை விடுதலை செய்யும் மாநில அரசின் முடிவு எதன் அடிப்படையில் எடுக்கப் பட்டது என்பது தான் கேள்வி என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.

 டைம்ஸ் ஆப் இந்தியா

* பல்வேறு சமூகத்தினருக்கு 76% இடஒதுக்கீடு வழங்கும் மாநிலத்தின் திருத்தப்பட்ட விதிகளை, தமிழ் நாட்டில் உள்ளது போன்று, அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடிதம் எழுதியுள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment