ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யின் தொழிலாளர் விரோதப் போக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யின் தொழிலாளர் விரோதப் போக்கு!

அஞ்சல்துறை சங்கங்களின் அங்கீகாரம் ரத்து சிஅய்டியு கண்டனம்

புதுடில்லி, ஏப்.29- ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கங்களின் தூண்டுதலின்பேரில் அஞ்சல் துறையில் செயல்பட்டுவந்த தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேள னத்திற்கு, அற்ப காரணங்களைக் கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் தொழிற்சங்க விரோத பழிவாங்கும் அடா வடித்தனமான நடவடிக்கைக்கு, சிஅய் டியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.    

இது தொடர்பாக சிஅய்டியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேளனம் என்பது, அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 70 விழுக் காட்டினரின் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு பெரும்பான்மை சங்கமாகும். இவை, ஒன்றிய அரசாங்கத்தின் நாசகர மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஊழி யர்களின் வாயை அடைக்கச் செய்திடும் கொடூரமான நடவடிக்கைகளே தவிர வேறல்ல. தேசிய அஞ்சல்துறை ஊழியர் களின் சம்மேளனமும், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கமும், அஞ்சல்துறை சேவைகளை, பலமுனைகளில், கார்ப் பரேட் மயம் மற்றும் தனியார்மயமாக்கிடும் அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வரும் சங்கங்களாகும். அரசின் இத்தகைய நாசகர கொள்கைகளுக்கு எதிராக, அஞ்சல் ஊழியர்களை அணி திரட்டி, பல்வேறு மட்டங்களில் போராட் டங்களில் ஈடுபட்டு வரும் சங்கங்களு மாகும். இதன்காரணமாக அரசாங்கத்தால் தன்னுடைய தனியார்மயக் கொள்கை களை அவ்வளவு எளிதாக முன்னெ டுத்துச் செல்லமுடியவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் கோபம் கொண்டுள்ள ஒன் றிய அரசாங்கம், இத்துறையில் பெரும் பான்மை ஊழியர்களின் ஆதரவினைப் பெற்றுள்ள இவ்விரு சங்கங்களின் அங் கீகாரத்தையும் ரத்து செய்திட முனைந் திருக்கிறது. அரசின் அஞ்சல்துறை ஊழியர்களின் நலன்களுக்காக, அஞ்சல் ஊழியர்களை அணிதிரட்டிப் போராடி வரும் அதே சமயத்தில், இவ்விரு சங் கங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்ததைப்போல, சக தொழிலாளர் அமைப்புகளின் அனைத் துப் போராட்டங்களுக்கும் ஒருமைப் பாடும் தெரிவித்து, அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கை களைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேளனமும், பி-3 சங்கங்களும் ஒன் றிய அரசு ஊழியர்கள் மற்றும் தொழி லாளர்கள் மகாசம்மேளனத்தின் முக்கிய மான உறுப்புகளாகும். வரலாறு படைத் திட்ட விவசாய சங்கப்போராட்டக் காலத் தின்போது, மகாசம்மேளனம் போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரி வித்து நிதிவசூலுக்கு அறைகூவல் விடுத்தது. அதன்மூலம் கொஞ்சம் நிதி வசூலித்து, மகாசம்மேளனத்திற்கு அளித் தது, மகா சம்மேளனம் அதனைப் பெற்று விவசாயிகளுக்கு அளித்தது. விவசாய விரோத ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் அஞ்சல்துறை அமைப்பு இத்தகைய ஒருமைப்பாட்டு நடவடிக்கையை ஓர் அரசியல் நன்கொடை என வர்ணித்து வழக்கு தொடுத்திருக்கிறது.

சிஅய்டியு-விற்கு நன்கொடை அளித் ததாக மற்றுமொரு அற்பமான, இரண்டக மான காரணத்தையும் அரசு கூறியிருக் கிறது. உண்மையில், மகா சம்மேளனத்தின் சார்பில், (இதில் தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேளனமும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கமும் பிரிக்கமுடியாத அங்கங்களாகும்) உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்திற்கு அளிக்கவேண்டிய இணைப்புக் கட் டத்தை, சிஅய்டியு மூலமாகச் செலுத்தி யுள்ளது. உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்திற்கு இணைப்புக் கட்டணம் செலுத்துவதுகூட ஒரு குற்றமா? இவ்வாறு ஒன்றிய அரசாங்கம், தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேளனத்தின் மீதும், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மீதும் நடவடிக்கை எடுத் திருப்பது ஒருதலைப்பட்சமான பழி வாங்கும் நடவடிக்கை மட்டுமல்ல, ஊழி யர்கள் மற்றும் சங்கங்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிற்சங்க உரி மைகளைப் பறித்திடும் ஒரு குற்றமுமாகும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும்.

தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அங்கீகாரத்தின் மீது, கார்ப்பரேட்-மதவெறிக் கள்ளப் பிணைப்பு அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்டுள்ள, இத்தகைய பழி வாங்கும் தாக்குதல்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் சங்கங்களின் மீதான உரிமைகள் மீதான தாக்குதல் களாகும். அரசின் நாசகரக் கொள்கை களுக்கு எதிராக தொழிற்சங்க இயக்கம், கார்ப்பரேட் மயத்திற்கு எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும் மேற் கொண்டுவந்த அனைத்துத் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும்,  தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்திருக்கின்றன. இதனால்தான் இந்த சங்கங்கள் மீது ஒன்றிய அரசாங்கம் ஆத்திரம் அடைந்திருக்கிறது.  இப்போது சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய் திருப்பதே இதன் அரசியல் நோக்கத்தைக் காட்டுகிறது. இதே போன்று போராடும் இதர சங்கங்கள் மீதும் இந்த அரசாங்கம் பாயக்கூடும் என்பதை நிராகரித்திட முடியாது. இத்தகைய அரசின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு சிஅய்டியு தன் முழு  ஆதரவினை நல்கிடும். அரசின் இத் தகைய அடிப்படைத் தொழிற்சங்க உரி மைகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்று குரல்கொடுக்க வேண்டியது தொழிலாளர் வர்க்கத்தின் கடமையாகும் என்று அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சிஅய்டியு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கையை நிபந்தனை எதுவுமின்றி அரசாங்கம் ரத்துசெய்திட வேண்டும் என்று அரசாங்கத்தையும், அஞ்சல் துறையையும் சிஅய்டியு கோருகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment