செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

செய்திச் சுருக்கம்

கனமழை

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

நுழைவுச்சீட்டு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணியில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, மே 7ஆம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள்  தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீட்பு

கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூர் ஊராட்சியில் மரம் வெட்டும் தொழிலில் 11 சிறுவர்கள் உள்பட 27 இருளர் மக்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

அமர்வுகள்

கோடை விடுமுறையில் தாக்கலாகும் அவசர வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையில் 29 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுகள் விசாரிக்கும் என அறிவிக் கப்பட்டு உள்ளது.

நீக்கம்

இந்தியாவின் விதிமுறைக்கு உள்படாமல் செயல் பட்ட 3,500க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

அவகாசம்

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு அரசுக்கு 6 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தள்ளுபடி

ரயில்களில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு கட் டணச் சலுகை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

வந்தனர்

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து மேலும் 750 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந் தனர். இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,360 பேர்.


No comments:

Post a Comment