பக்தி பிசினஸ் மோசடி அம்பலம் புகழ்பெற்ற கோயில்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக மோசடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

பக்தி பிசினஸ் மோசடி அம்பலம் புகழ்பெற்ற கோயில்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக மோசடி

சென்னை, ஏப் 28 பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இணைய வழி முன்பதிவு செய்யும் நபர்களிடம் மோசடி செய்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாகவும், எனவே மோசடி கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

சமூக வலைதளத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு பக்கம் நன்மைகள் இருந்தால் மறு பக்கம் தீய செயல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூலில் உறவினர், நண்பர்கள் போல போலியான பெயரை பதிவு செய்து பணம் கேட்டு மெசேஜ் அனுப்பவதும், ஓடிபி அனுப்பி ஏமாற்றும் கும்பல் தற்போது 'கடவுளர்' பெயரை கூறி ஏமாற்றி வருகிறது.  இந்த மோசடி தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக கூறி போலி இணையதளங்கள் உருவாக் கப்பட்டு பக்தர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள் ளது.. வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விரும்பும் பக்தர்களைக் குறி வைத்து வெப்சைட் தொடங்கி போலி இணையவாசிகள் இந்த மோசடியை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மோசடி செய்பவர்கள் தங்களை ஹெலிகாப்டர் புக்கிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் போல் காட்டிக்கொண்டு, முன்பதிவைத் தொடர பக்தர்கள் பணம் செலுத்தும் விவரங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். மேலும், மோசடி செய்பவர்கள் இந்திய தொலைப்பேசி எண்களைப் பயன்படுத்ததி வருவ தாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சட்டப்பூர்வ நிறுவனமாகத் தோன்றுவ தற்காக  ஆலயங்கள் அல்லது கட வுளரின் படங்களை தங்கள் வெப்சைட் டில் இடம்பெறவைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக, மோசடி செய்பவர்கள் பக்தர்களிடம் யூபிஅய் மூலம் பணம் செலுத்துமாறு கேட்கி றார்கள் மற்றும் பணம் செலுத்தியவுடன் போலி  பயணச் சீட்டுகளை பக்தர் களுக்கு அனுப்புகின்றனர். இதற்குப் பிறகு, மோசடி செய்பவர்கள் தங்கள் தொலைப்பேசி எண்களை அணைத்து விட்டு அல்லது தூக்கி எறிந்து விடுகிறார்கள், இதனையடுத்து மோசடி கும்பலை பக்தர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.  

எனவே இந்த மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்க எப்போதும் நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும். பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நிறு வனத்தின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும். சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள்/செய்திகளின் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. மோசடி நபர்கள் குறித்து சைபர் க்ரைம்க்கு தகவல் தெரிக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள் ளனர். 


No comments:

Post a Comment