அய்யய்ய ஆபாசமே! உன் பெயர்தான் தமிழ் வருஷப்பிறப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

அய்யய்ய ஆபாசமே! உன் பெயர்தான் தமிழ் வருஷப்பிறப்பா?

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோச மாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரதமுனிவர் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்து “நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன?” அதற்குக் கண்ணன் “நான் இல்லாப் பெண்ணை வரிக்க” என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு, “நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன்” என்றனன்.

கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு கேவலமான, ஆபாசமான, அறி வுக்குப் பொருத்த மற்ற அடிப்படைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண் டாடுபவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது?

ஆதாரம்: 'அபிதான சிந்தாமணி'

 

No comments:

Post a Comment