பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம்

வல்லம், ஏப். 6- சமூகப்பணித் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதில் உதவி பேராசிரியர் முனைவர் ஞானராஜ், அனைவரை யும் வரவேற்றுப் பேசினார். அவர் பேசுகையில் மனதையும் உடலை யும் சரியாக பராமரிப்பதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்வை அடைய லாம் என்றார். இந்த கருத்தரங்கிற்கு சிறீகாந்த், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் (ஞிஸிஞிகி) அவர்கள் தலைமையுரையாற்றி னார். அவர் தமது உரையில் இன் றைய காலக்கட்டத்தில் பல்வேறு பணிகளினால் ஏற்படும் மனச் சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது என்றும் அதனை கையாளுவதற்கு நாம் உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி முறை களை கையாள வேண்டும் என் றார். மேலும் அலைபேசி பயன் பாட்டை தேவைக்கு மட்டும் உப யோகிப்பதன் மூலம் தூக்கமின் மையை தவிர்க்கலாம் என்றார். அதனைத் தொடர்ந்து சசிகலா, கூடுதல் மேலாளர், காவேரி மருத்துவ குழுமம், திருச்சி அவர் கள் மன அழுத்த மேலாண்மை பற்றிய பயிற்சியை செயல்முறை வாயிலாகவும் மற்றும் விளையாட் டின் மூலமாகவும் விளக்கினார். 

அவர்தமது உரையில்:- நாம் அனைவரும் குடும்பம், சமூகம் மற்றும் அலுவலகங்களில் ஏற்ப டும் பிரச்சினைகளை எப்படி கையாளுவதன் மூலம் மன அழுத் தத்தை குறைக்க முடியும் என்றார். மேலும் மன அழுத்தம் ஏற்படும் போது நமக்குத் பிடித்த பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என் றும், குழந்தைகளோடு நேரம் செலவிடுதல், தோட்டப் பணிக ளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், பிடித்த பாடலை கேட்பது, நண பர்களுடன் உரையாடுதல் போன் றவற்றின் மூலம் மன அழுத்தம் வராமல் தடுக்கலாம் என்றார். இதில் 100க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டு பயன்பெற்றனர்.

இறுதியாக முனைவர் ஞான ராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த கருத்தரங்கம் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம், சமூகப் பணித்துறை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

No comments:

Post a Comment