ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு

ஏப்ரல்-14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநாடு அழைப்பிதழை வழங்கினார். மகிழ்வுடன் பெற்றுகொண்டு  மாநாட்டை சிறப்புடன் நடத்துவோம் என தெரிவித்தார். உடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், பகுத்தறி வாளர் கழக மாநிலத்துணைத்தலைவர் அ.சரவணன், புதுக் கோட்டை நகரத் தலைவர் சு.கண்ணன்.


ஏப்ரல்-14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 6.4.2023 அன்று மாலை 5 மணியளவில் கிழக்கு கடற்கரைச் சாலை மணமேல்குடி தாஜ் மளிகை உரிமையாளரி டம் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அழைப்பிதழ் வழங்கி கடைவீதி வசூல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் அழைப்பிதழை பெற்றுக்கொண்டு மாநாட்டுக்கு நன்கொடையாக ரூ. 500 மகிழ்வுடன்  வழங்கினர்.



No comments:

Post a Comment