6 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 183 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

6 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 183 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!

உ.பி. சாமியார் பி.ஜே.பி. அரசின் அராஜகம்: நீதி விசாரணை நடத்திடுக!

உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு

அத்திக் அகமதுவின் 19 வயது மகன் ஆசாத் அகமது உள்ளிட்ட 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் அத்திக்  அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புதுடில்லி, ஏப்.18- உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்ய நாத் தலைமையிலான 6 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் 183 பேர்  என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டது குறித்து வல்லுநர் குழு அமைத்து விசா ரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

183 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே அங்கு என்கவுண்ட்டர் பெயரிலான படுகொலை கள் புதிய உச்சத்தைத்  தொட்டுள்ளன. இதுவரை 1038 என்கவுண்ட்டர் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டதில், 183 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

அதோடு மட்டுமல்ல!

238 பேர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந் துள்ளனர். 2017 மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை உ.பி.  மாநிலத்தில் 10 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட அதிதீவிர காவல்துறையினரின் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதில், 23 ஆயிரத்து 300  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்,

ரவுடிகள் ராஜ்ஜியமா?

இந்நடவடிக்கையால் 5 ஆயிரத்து 46 பேர் காயமடைந் தனர் என்பது காவல்  துறையின் கணக்கு. காவல்துறைத் தரப்பின் தகவல்படி இந்த என்கவுண்ட்டர்களின் போது, காவல்துறையினர் 1,443 பேர்  காயம் அடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர், விகாஸ் துபே என்ற  ரவுடிக் கும்பலால் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட வர்கள் ஆவார்கள். 

எனினும் என்கவுண்ட்டர்கள் நின்ற பாடில்லை. கடந்த 2 மாதங்களில் வழக்குரைஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் மட்டும் 6 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமதுவின் 19 வயது மகன் ஆசாத் அகமது உள்ளிட்ட 2 பேர், ஜான்சி நகரில் கடந்த வாரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதுதொடர்பான பரபரப்பு அடங்கு வதற்கு உள்ளேயே மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக்  அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது  ஆகியோரும், நீதிமன்றத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும்போது சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர்.  

பத்திரிகையாளர்களின் முன்னிலையில் - காவல்துறையின் பாதுகாப்புடன்!

இந்த இரு படுகொலை, காவல்துறையினரால் செய்யப் படாவிட்டாலும், காவல்  துறையினரின் பாதுகாப்புடன், பத்திரிகையாளர்கள் அனைவரின் முன்னிலையில், ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட் டுள்ளது. மொத்தம் 36 ரவுண்டுகள் சுடப்படும்  வரை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். 

இவற்றையெல்லாம் மய்யப்படுத்தித்தான் வழக்குரை ஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். 

அதில், “உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த என்கவுண்ட் டர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

குறிப்பாக, அத்திக் அகமது மற்றும் அவ ரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரின் கொலை குறித்து விசாரிக்கவும் விஷால் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment