வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு - படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு - படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 27- வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்த நாளான இன்று (27.4.2023) காலை 10.30 மணியளவில் சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவர்தம் சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டும், சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில திராவிடர் தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், தொழிலாளர் பேரவை செயலாளர் கருப்பட்டி சிவகுருநாதன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, சென்னை மண்டல தலைவர் 

தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், திருச்சி மண்டல திராவிடர் தொழிலாளரணி தலைவர் முபாரக்,  சோழிங் கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செய லாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொடுங் கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், மங் களபுரம் அமைப்பாளர் மு.டில்லிபாபு, தங்க.தனலட்சுமி, பூவை.செல்வி, செ.பெ.தொண்ட றம், த.மரகதமணி, சீர்காழி இராமண்ணா, பெரியார் மாணாக்கன், சி.காமராஜ், தொழிலாள ரணி பாலு, வை.கலையரசன், செல்லப்பன், த.பர்தின், நா.பார்த்திபன், அயப்பாக்கம் ந.கதிரவன், கோடம்பாக்கம் மாரியப்பன், படப்பை சந்திரசேகரன், பதம்குமார், இராஜன் ஜேம்ஸ், அண்ணா மாதவன், கமலேஷ் மற்றும் பல தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தேவாங்கர் எழுச்சி இயக்கம்

தேவாங்கர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் வி.ஜெயபால், வீனஸ் பாலு, கபீர்தாஸ், செந்தில்குமார், செல்வம், யுவராஜ் ஆகியோர் பிட்டி தியாகராயர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சமாஜ்வாடி

தமிழ்நாடு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் கவிஞர் வாசு தியாகராயர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். 


No comments:

Post a Comment